Animal: கிரஷ்மிகா கிளப்பில் நானும் இணைந்துட்டேன்.. லிப் லாக் பார்த்துக் கூட காண்டாகாத ஆலியா பட்!

மும்பை: அனிமல் படத்தை பார்த்து விட்டு பலரும் இந்த படத்தை ஆலியா பட் கண்ணுல காட்டிடாதீங்க என கலாய்த்து வரும் நிலையில், ஆலியா பட் படக்குழுவினரை பாராட்டி ஒரு போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் நடிப்பில் நேற்று வெளியான அனிமல் படம் முதல் நாளில் 116 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Alia Bhatt says i also joined Crushmika club after watching Animal

படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் திமித்ரி என இரு நடிகைகளுடன் ரன்பீர் கபூர் சும்மா புகுந்து விளையாடி உள்ள நிலையில், அதையெல்லாம் பார்த்து ஆலியா பட் அப்செட் ஆகி விடுவார் என ட்ரோல்கள் குவிந்த நிலையில், அதற்கு அழகாக பதிலடி கொடுத்துள்ளார்.

காதல் திருமணம்: பிரம்மாஸ்திரா படத்தில் நடிக்கும் போது ரன்பீர் கபூர், ஆலியா பட் காதலிக்க ஆரம்பித்து பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர். ஆலியா பட்டுக்கு மகளும் பிறந்த நிலையில், தான் பிரம்மாஸ்திரா படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் ஆலியா பட் தனியாக ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்த நிலையில், ரன்பீர் கபூர் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருடன் நெருக்கமாக நடித்து வருகிறார். காதல் திருமணம் என்பதால், சினிமாவை சினிமாவாகவே ஆலியா பட்டும் ரன்பீர் கபூரும் பார்த்து வருகின்றனர்.

கிரஷ்மிகா கிளப்: அனிமல் படம் முழுக்க ராஷ்மிகா மந்தனாவும் ரன்பீர் கபூரும் சும்மா மாறி மாறி முத்த மழை பொழிந்துக் கொண்டும் கட்டிப் புரண்டு உருண்டு நடித்துக் கொண்டும் வாயில் வாய் வைத்து தண்ணீரை குடித்துக் கொண்டும் இருந்த நிலையில், அதையெல்லாம் பார்த்து ஆலியா பட் அசந்து போய் விட்டாராம். கிரஷ்மிகா கிளப்பில் நானும் இணைந்து விட்டேன் என பாராட்டி உள்ளார்.

கணவருக்கு ஹார்ட்டீன்: சந்தீப் ரெட்டி வங்கா போல ஒரு ஆள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார் என்றும் அனிமல் படம் தாறுமாறாக உள்ளது. பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்டோரின் நடிப்பு வேறலெவல் என பாராட்டி உள்ளார். கடைசியில் தனது கணவரையும் அனிமல் பார்க் பர்ஃபார்மன்ஸ் என ஹார்ட்டின் எல்லாம் விட்டு கொஞ்சியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X