துல்கர் சல்மான் மகளுக்கு கிப்ட் அனுப்பிய ஆலியா பட்...காரணம் என்ன தெரியுமா ?
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், மலையாள நடிகர் துல்கர் சல்மானின் மகள் மரியத்திற்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி உள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, துல்கர் சல்மானும் அனுப்பி உள்ளார்.

2019 ல் துல்கர் சல்மான் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகள் மரியத்தை நடிகை ஆலியாவை போல் வளர்க்க விரும்புகிறேன். ஆலியா நடித்த சில படங்களை பார்த்துள்ளேன். ஆலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக காதல் என்று அர்த்தமல்ல என கூறி இருந்தார்.
இதே போல் ஆலியாவும் ஒரு பேட்டியில், நான் துல்கர் சல்மானின் நடிப்பிற்கு மிக பெரிய ரசிகை என கூறி இருந்தார். இப்போது துல்கர் சல்மானின் மகளையும் எவ்வளவு நேசிக்கிறார் என காட்ட, இந்த பரிசை அனுப்பி உள்ளார்.
மரியத்திற்கு சில ஆடைகளை பரிசாக அனுப்பி உள்ள ஆலியா, அத்துடன் கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளார். அதில், நான் எவ்வளவு ஆசையுடன் இதை அனுப்பி உள்ளேனோ அதை விட அதிகமாக மரியம் இதனை விரும்புவார் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆலியா தனது மகளுக்கு அனுப்பிய பரிசுகள் மற்றும் அத்துடன் ஆலியாவிற்கு தான் தெரிவித்த நன்றி குறிப்பையும் துல்கார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆலியாவும் , துல்கர் சல்மானும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை.
தற்போது துல்கர் சல்மான், மலையாள இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரீவ்ஸ் இயக்கும் படம் ஒன்றில் நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் ரிலீசான இப்படத்தில் டயானா பென்டி, மனோஜ் கே விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











