இந்தா இவரும் மாலத்தீவு போயிட்டார்ல.. பிகினியில் மிரட்டும் பிரபல ஹீரோயின்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள், நடிகை ஆலியா பட்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஆலியா, கரண் ஜோஹரின் ஸ்டூடன்ட் ஆப் த இயர் என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

ரன்பீர் கபூர்
அடுத்து ஹைவே, டியர் ஜிந்தகி, ராஸி உட்பட பல படங்களில் நடித்தார். 2 ஸ்டேட்ஸ் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். இவரும் பிரபல இந்தி ஹீரோ ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர். ரன்பீர், பிரபல இந்தி ஹீரோ ரிஷி கபூரின் மகன். இவர்கள் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

பிரம்மாஸ்த்ரா
பின்னர் அதுபற்றிய தகவல் வெளிவரவில்லை. இருவரும் பிரம்மாஸ்த்ரா என்ற ஃபேன்டஸி படத்தில் முதன்முறையாக, ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஆலியா. அவர் நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது.

புதிய வீடு
இதற்கிடையே, ரன்பீர் கபூரின் வீட்டுக்கு அருகே, புதிதாக வீடு வாங்கி இருக்கிறார், நடிகை ஆலியா பட். அவருக்கு ஏற்கனவே மும்பை ஜூஹு பகுதியிலும் லண்டனிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன. இப்போது, பாந்த்ரா பகுதியில் புதிய வீட்டை வாங்கி இருக்கிறார். இதை அவர் ரூ.32 கோடிக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிகினி புகைப்படங்கள்
இந்நிலையில் நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு நடிகைகள் பலர் அங்கு சென்று வந்தனர். அங்கிருந்தபடி, கூல் ஸ்டில்களை வெளியிட்டனர். சிலர் பிகினி புகைப்படங்களையும் வெளியிட்டனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

நடிகை ஆலியா பட்
இந்நிலையில் நடிகை ஆலியா பட்டும் தோழிகளுடன் மாலத்தீவுக்கு ஹாலிடேவுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் தோழிகளுடன் நடனமாடியபடி ஜாலியாக விளையாடிய புகைப்படங்களை சிலர் வெளியிட்டுள்ளனர். கூடவே தாறுமாறாக செல்ஃபி புகைப்படங்களையும் அவர்கள் எடுத்துள்ளனர்.

ஆச்சரிய கமென்ட்
நடிகை ஆலியா பட், கடற்கரை மணலில் அமர்ந்தபடி எடுத்துள்ள பிகினி ஸ்டில்களை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. நெட்டிசன்ஸ் அதை புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர் ஆச்சரிய கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











