படம் அட்டு ஃபிளாப் ஆகிடுச்சு.. கொஞ்சமும் கவலைப்படாமல் ஆலியா பட் செய்யும் சேட்டையை பாருங்க!
மும்பை: ஆலியா பட்டின் 'சடக் 2' படம் அதிக டிஸ்லைக்குகளை மட்டுமின்றி மோசமான படம் என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
இந்த நிலை மற்ற நடிகர்களுக்கு ஏற்பட்டு இருந்தால், கொஞ்ச நாட்கள் முகத்தை எங்கும் காட்டாமல் தலைமறைவு ஆகி இருப்பார்கள்.
ஆனால், நடிகை ஆலியா பட்டோ, அதுக்கெல்லாம் கவலை பட்டா எப்படி பாஸ் என்ற ரேஞ்சுக்கு பாத் டப்பில் படுத்த படி போட்டோ போட்டு மிரள விட்டு வருகிறார்.

நல்ல வேளை
இயக்குநர் மகேஷ் பட் ‘சடக் 2' படத்தில் இருந்து சுஷாந்த் சிங்கை நீக்கினாரா? இல்லை அவரே இந்த கதை பிடிக்கவில்லை என ஒதுங்கி கொண்டாரா என தற்போது பாலிவுட் ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும், நல்ல வேளையாக இப்படியொரு மொக்கை படத்தில் சுஷாந்த்சிங் ராஜ்புத் நடிக்க வில்லை எனவும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அதிக டிஸ்லைக்குகள்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா படத்தின் ட்ரைலரை உலகிலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்ரைலர் என பெருமையை அடைய செய்த அதே பாலிவுட் ரசிகர்கள் தான், நடிகை ஆலியா பட்டின் சடக் 2 படத்தை அதிக டிஸ்லைக்குகள் பெறவும் வைத்து தங்களின் பழியை தீர்த்துக் கொண்டனர்.

அப்பாவே போதும்
மேலும், நடிகை ஆலியா பட்டுக்கு நாம ஏதும் செய்ய வேண்டியதில்லை. அவருடைய அப்பா மகேஷ் பட்டே போதும். இப்படியொரு அற்புதமான படத்தை எடுத்து மகளின் எதிர்காலத்தை அதள பாதளத்தில் தள்ளி விட்டார். கல்லி பாய் படத்தில் நடித்து எந்த அளவுக்கு பெயரை சம்பாதித்தாரோ, மொத்தத்தையும் சடக் 2 காலி செய்து விட்டதே என கிண்டல் செய்கின்றனர்.

சாபம் சும்மாவா விடும்
பாலிவுட்டில் எத்தனையோ படங்கள் படு தோல்வியை சந்தித்து உள்ளன. ஆனால், அந்த படங்களுக்கு கூட இந்த அளவுக்கு மோசமான 1.1 ரேட்டிங்கை விமர்சகர்கள் கொடுத்து கிழித்து தொங்கவிடவில்லை என்றும், நடிகர் சுஷாந்தின் ரசிகர்கள் விட்ட சாபம் சும்மாவா விடும் என்றும், ஆலியா பட்டை வைத்து படம் தயாரிப்பவர்கள் இனிமேலாவது யோசிக்க வேண்டும் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

கொஞ்சமும் கவலைப்படவில்லை
ஆனால், நடிகை ஆலியா பட்டோ, எதைப்பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல், தனது அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில், தற்போது ELLE மேகசினுக்காக எடுக்கப்பட்ட பாத் டப் போட்டோஷூட்டை வெளியிட்டு, தனது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

தொடரும் ட்ரோல்
சடக் 2 பட ரிலீஸ் சமயத்தில், கமெண்ட் செக்ஷனை முடக்கி வைத்திருந்த நடிகை ஆலியா பட், இந்த முறை ரசிகர்கள் என்ன திட்டினாலும் திட்டிக் கொள்ளட்டும் என கமெண்ட் செக்ஷனை ஆக்டிவ் செய்துள்ளார். ஆலியா பட்டின் மேக்கப் இல்லாத நேச்சுரல் பியூட்டி அழகை அவரது ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வந்தாலும், பல நெட்டிசன்கள் சடக் 2 படத்தின் தோல்வி குறித்தே ட்ரோல் செய்து வருகின்றனர்.
Recommended Video

ஏகப்பட்ட பெரிய படங்கள்
ஆலியா பட் நடிப்பில் ஏகப்பட்ட பெரிய படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காதலர் ரன்பீர் கபூருடன் ஆலியா பட் நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்., சஞ்சய் லீலா பஞ்சாலியின் கங்குபாய் காத்தியாவதி, கரண் ஜோகரின் தக்த் என எல்லாமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications