அசிங்கமா இல்லை.. வீட்டுக்குள்ள ஜூம் போட்டு பார்ப்பீங்களா.. பறிபோன பிரைவசி.. ஆலியா பட் ஆத்திரம்!
மும்பை: நடிகை ஆலியா பட்டின் பிரைவசிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில புகைப்படக் கலைஞர்கள் நடந்து கொண்டது நடிகையை ஆத்திரமடைய செய்துள்ளது.
மும்பையில் பிரபலங்கள் எங்கே சென்றாலும், புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களை போட்டோ எடுத்தும் வீடியோ எடுத்தும் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு எல்லைக்கு மீறி வட இந்திய மீடியா ஒன்றின் புகைப்படக் கலைஞர்கள் நடந்து கொண்டது ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அம்மாவான ஆலியா பட்
நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆலியா பட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஹா என அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். நடிகை ஆலியா பட் வீட்டில் குழந்தைக்கு பால் கொடுப்பது, கொஞ்சி விளையாடுவது என தனது பிரைவசியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு பிரைவசி மீறல் செயல் அவரை வெகுவாக பாதித்துள்ளது.

அவங்களும் மனுசங்க தான்
நடிகர்கள் நடிகைகளின் சினிமா வாழ்க்கையை விட அவர்களது பர்சனல் வாழ்க்கையை தெரிந்து கொள்ளவே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது தான் இது போன்ற சில மீடியாக்கள் எல்லை மீறி செல்வதற்கான காரணமாகவே அமைகிறது என்கின்றனர். எதுவாக இருந்தாலும் ஒரு எல்லை உண்டு என்றும் அந்த எல்லை இன்று முழுவதுமாக மீறப்பட்டு விட்டது என நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபத்துடன் கொந்தளித்துள்ளார்.

ஜூம் போட்டு
ஆலியா பட்டின் வீடு எந்தளவுக்கு ஹை செக்யூரிட்டியான வீடாக பிரபலங்கள் வசிக்கும் ஏரியாவாக இருந்திருக்கும். இந்நிலையில், ஆலியா பட்டின் வீட்டின் அருகே உள்ள பால்கனியில் இருந்து இரு புகைப்படக் கலைஞர்கள் ஜூம் போட்டு ஆலியா பட் வீட்டுக்குள் இருக்கும் போட்டோக்களை எடுத்ததை அறிந்த ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த மீடியாவை வெளுத்து வாங்கி உள்ளார்.

எந்த உலகத்தில் இது சரி
அசிங்கமா இல்லை, இப்படி அடுத்தவர் பிரைவசியில் கேமரா வைத்து பார்ப்பது என திட்டித் தீர்த்த ஆலியா பட், எந்த உலகத்தில் இது சரி என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட், விமான நிலையம், ரெஸ்டாரன்ட் என எங்கே சென்றாலும் உங்க தொல்லை தாங்கலன்னு நிம்மதியா வீட்டுக்குள் வந்தால் இங்கேயும் கேமரா கொண்டு வந்தீங்கன்னா என்ன பண்றது என விளாசி எடுத்துள்ளார் ஆலியா பட்.

அனுஷ்கா முதல் ஜான்வி வரை
ஆலியா பட்டுக்கு மட்டுமின்றி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான அனுஷ்கா ஷர்மா, ஜான்வி கபூர், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் சமீப காலமாக இதே போன்ற பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர். தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டு தன்னை புகைப்படம் எடுத்த இரு புகைப்படக் கலைஞர்கள் மீதும் நடிகை ஆலியா பட் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











