நடிகை ஆலியா பட் செய்தது தான் சொந்த செலவில் சூனியம் வைப்பதோ?

By Siva

மும்பை: நடிகை ஆலியா பட் 10 நிமிடம் ஓடும் வீடியோவில் நடித்து மீண்டும் அனைவரும் அவரை கிண்டலடிக்கும்படி நடந்து கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் பார்க்க அம்சமாகத் தான் உள்ளார். ஆனால் அவர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நம் நாட்டின் ஜனாதிபதி பிரித்விராஜன் சவுகான் என்று பதில் அளித்ததும் அளித்தார் அதில் இருந்து அவர் பற்றிய ஜோக்குகள் தான் இணையதளத்தில் உலவி வருகின்றன.

இந்நிலையில் ஆலியா 10 நிமிடம் ஓடும் வீடியோவில் நடித்து அதை அனைவரையும் பார்க்குமாறு வேறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜீனியஸ்

ஜீனியஸ்

ஆலியா பட் - ஜீனியஸ் ஆப் தி இயர் என்ற அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது. அதை பலரும் பார்த்து ஆலியாவை நக்கல் அடித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழுகை

அழுகை

எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள். கூகுள் செய்தால் கூட ஆலியா ஜோக்ஸ் என்று தான் வருகிறது என்று கூறி அழும் ஆலியா கண்ணீரை கிரெடிட் கார்டால் துடைக்கிறார்.

சபானா ஆஸ்மி

சபானா ஆஸ்மி

ஆலியா புத்திசாலி ஆக டம்ப் பெல் மென்ட்டல் ஜிம்முக்கு(Dumb Belle mental gym) செல்கிறார். அங்கு அவருக்கு நடிகை சபானா ஆஸ்மி போன்று புத்திசாலியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

செஸ்

செஸ்

பயிற்சியாளர் செஸ் போர்டில் ஒரு காயை நகர்த்திவிட்டு ஆலியாவை காய் நகர்த்துமாறு கூற அவரோ கேரம் போன்று அந்த காயை அடித்துவிடுகிறார்.

பாடல்

பாடல்

ஆலியாவுக்கு சாதாரணமாக சொல்லிக் கொடுத்தால் மண்டையில் ஏறாது என்று பாடல் வழியாக கற்றுக் கொடுக்கிறார் பயிற்சியாளர்.

மிரட்டல்

மிரட்டல்

எந்த நாட்டு கிரிக்கெட் அணியை ப்ரோடியஸ் என்கிறோம் என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த சட்டையை அயர்ன் பாக்ஸை வைத்து எரித்துவிடுவேன் என்று மிரட்டிய பிறகே ஆலியா பதில் அளிக்கிறார்.

குழந்தை

குழந்தை

ஒரு குழந்தையை செஸ் விளையாட்டில் தோற்கடித்துவிட்டு அதை பெருமையாக நினைத்து அந்த ஆட்டம் போடுகிறார் ஆலியா.

கரண்

கரண்

பயிற்சி பெற்ற பிறகு காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆலியா அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்துவிட்டு அந்த சந்தோஷத்தில் அழுகிறார். அதை பார்த்த கரண் இடத்தை காலி பண்ணுங்கள் என்கிறார். அதை காதில் வாங்காமல் ஆலியா அழுகிறார்.

முதல் பெண் பிரதமர்

முதல் பெண் பிரதமர்

புத்திசாலி ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஆலியா நான் எதுவாக வேண்டுமானாலும் ஆவேன். ஏன் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக கூட ஆவேன் என்கிறார். இதை கேட்ட ஒருவர் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி என்கிறார். அதற்கு ஆலியா என்னது ஏற்கனவே ஒரு பெண் பிரதமராக இருந்தாரா என்று கேட்கிறார்.

ஏற்கனவே

ஏற்கனவே ஆலியாவை ஓட்டு ஓட்டு என்று ஓட்டுகிறார்கள். இதில் இந்த வீடியோ வேறா? நீங்களும் பார்த்து சிரியுங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X