ஆர்ஆர்ஆர் ஷெட்யூல் திடீர் மாற்றம்.. இந்த மாதம் இல்லை.. அடுத்த மாதம் பங்கேற்கிறார் ஆலியா பட்!

By

ஐதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஆலியா பட் அடுத்த மாதம் கலந்துகொள்ள இருக்கிறார்.

ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

வாழ்க்கைக் கதை

வாழ்க்கைக் கதை

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

லீக் ஆன காட்சி

லீக் ஆன காட்சி

கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் படம் உருவாகி வருகிறது. பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் நடந்து வந்தது. இருந்தும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது.

அசத்தல் வீடியோ

அசத்தல் வீடியோ

இதையடுத்து படத்தின் ஷூட்டிங்குக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த இதன் ஷூட்டிங் கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. அதற்கான அசத்தல் வீடியோவை படக்குழுவினர் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அது வைரலானது.

கொமரம் பீம் டீஸர்

கொமரம் பீம் டீஸர்

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பீம் கேரக்டருக்கான டீஸர் வெளியிடப்பட்டது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்தி நடிகை ஆலியா பட், இந்த படத்தின் ஷூட்டிங்கில் நவம்பர் மாதம் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.

Recommended Video

Full Video: Ram Charan & Jr NTR helping their Wife | #betherealman
ஷெட்யூல் மாற்றம்

ஷெட்யூல் மாற்றம்

ஆனால், ஷெட்யூலை இயக்குனர் ராஜமவுலி மாற்றி அமைத்துள்ளதால், ஆலியா பட் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆலியா பட் நடிக்கும் காட்சியை படமாக்குவதற்கு முன், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் காட்சிகளை முடித்துவிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X