Parineeti Chopra: பரினீதி சோப்ரா முதல் ஆலியா பட் வரை.. நிச்சயதார்த்த மோதிரங்களின் விலை தெரியுமா?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தாவும் டேட்டிங் செய்து வருகின்றனர் என பேச்சுக்கள் அடிபட்டப்போது இருவரும் அதை நைஸாக மறைத்து வந்தனர்.
ஆனால், கொஞ்ச நாட்களிலேயே இருவரும் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டு நேற்று டெல்லியில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டனர்.

பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில், பரினீதி சோப்ராவின் வைர மோதிரம் குறித்தும் மற்ற பிரபல பாலிவுட் நடிகைகளின் நிச்சயதார்த்த மோதிரங்கள் குறித்த முழு தொகுப்பை இங்கே பார்க்கலாம் வாங்க..
பரினீதி சோப்ரா வைர மோதிரத்தின் விலை: பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ சத்தாவை மே 13ம் தேதி நிச்சயம் செய்துக் கொண்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள போகின்றனர்.

நேற்று நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பரினீதி சோப்ராவின் கையில் ராகவ் சத்தா அணிவித்த வைர மோதிரத்தின் விலை மட்டும் 80 முதல் 90 லட்சம் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வைர மோதிரத்தை காட்டியபடி எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் பரினீதி சோப்ரா ஷேர் செய்துள்ளார்.

ஆலியா பட் வைர மோதிரம்: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் டாப் ஹீரோயின் ஆலியா பட் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிரம்மாண்டமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்துக் கொண்டனர்.
ரன்பீர் கபூரின் லக்கி நம்பரான 8ம் நம்பர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த வைர மோதிரத்தை ஆலியா பட்டுக்கு நிச்சயதார்த்தத்தின் போது ரன்பீர் கபூர் அணிவித்தார். அதன் விலை மட்டும் 3 கோடி ரூபாய் என்கின்றனர்.

கியாரா அத்வானி நிச்சயதார்த்த மோதிரம்: இந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நடிகை கியாரா அத்வானிக்கும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.
பல கோடி ரூபாய் செலவு செய்து நடைபெற்ற அந்த திருமணத்திற்கு முன்னதாக நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் நடிகை கியாரா அத்வானிக்கு அணிவிக்கப்பட்ட வைர மோதிரத்தின் விலை 1 கோடி ரூபாய் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











