ராஜமெளலி மேல் பயங்கர ஆத்திரத்தில் உள்ளாரா ஆலியா பட்? திடீர்னு அப்படி பண்ணிட்டாரே!

மும்பை: ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு இணையான கதாபாத்திரம் என கதை சொல்லி கால்ஷீட் வாங்கிய ராஜமெளலி படத்தில் ஏகப்பட்ட ஆலியா பட் காட்சிகளை நீக்கி விட்டார் என ஆலியா பட் பயங்கர ஆத்திரத்தில் உள்ளார் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷனுக்கு ஆலியா பட் வராத போதே ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என புகைய ஆரம்பித்த நிலையில், தற்போது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

எல்லாத்தையும் விட ராஜமெளலி மீது கொண்ட கோபம் காரணமாக ஆலியா பட் செய்த அந்த செயல் தான் தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது.

கங்குபாய் கத்தியவாடி

கங்குபாய் கத்தியவாடி

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் மும்பை கேங்ஸ்டர் கங்குபாயாக நடித்து சோலோவாகவே 100 கோடிக்கும் அதிகமான கலெக்‌ஷனை அள்ளி இருந்தார் ஆலியா பட். கங்குபாய் படத்திற்கு பிறகு ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட் நடிப்பு எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலத்த ஆவலுடன் தியேட்டருக்கு சென்ற நிலையில், பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

ஆலியா எங்கே

ஆலியா எங்கே

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆரை அந்த அளவுக்கு மாஸாக காட்டிய இயக்குநர் ராஜமெளலி அஜய் தேவ்கனுக்கு கூட ஃபிளாஷ்பேக்கில் அப்பா ரோல் கொடுத்து கொஞ்சம் வெயிட் காட்டியிருந்தார். ஆனால், ஆலியா பட் எங்கேப்பா என பாலிவுட் ரசிகர்கள் சல்லடை போட்டுத் தேடும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் வெறும் கேமியோ ரோலில் வந்து சென்றது போல வாம்மா மின்னல் என்பது போல சட்டென வந்து சென்று விட்டது ஆலியா பட் ரசிகர்களை மட்டுமின்றி ஆலியா பட்டையும் ரொம்பவே அப்செட் ஆக்கியது.

ஹீரோ வொர்ஷிப்

ஹீரோ வொர்ஷிப்

இயக்குநர் ராஜமெளலி கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கு இல்லை என்பதை நிரூபித்து விட்டார். ஹீரோ வொர்ஷிப்பாக கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சம அளவு வெயிட் கொடுக்க வேண்டும் என நினைத்த ராஜமெளலி ஆலியா பட் நடித்த பல காட்சிகளை வெட்டித் தூக்க சொல்லி விட்டாராம்.

ஆத்திரத்தில் ஆலியா

ஆத்திரத்தில் ஆலியா

இதன் காரணமாகவே துபாய், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஹீரோக்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு புரமோஷன் செய்த ராஜமெளலி உடன் ஹீரோயின் ஆலியா பட் எங்கேயும் வர முடியாது என அதிரடியாக மறுத்து விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இயக்குநர் ராஜமெளலி இப்படி தன்னை இருட்டடிப்பு செய்வார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஆலியா பட் அவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளாராம்.

டெலிட் பண்ணிட்டாரு

டெலிட் பண்ணிட்டாரு

தனது அடுத்த படமான பிரம்மாஸ்த்ரா படத்தின் புரமோஷன்களில் தீவிரமாக இறங்கி உள்ள நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த போஸ்டர்களையும் டெலிட் பண்ணி தூக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி பாலிவுட் முதல் டோலிவுட் வரை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அப்போ மகேஷ் பாபு படத்தில்

அப்போ மகேஷ் பாபு படத்தில்

நடிகை ஆலியா பட்டுக்கும் இயக்குநர் ராஜமெளலிக்கும் இடையே இப்படியொரு பிரச்சனை வெடித்துள்ள நிலையில், அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு ஆலியா பட் நடிக்க மாட்டார் என்றும் ராஜமெளலி வேறு ஒரு பாலிவுட் நடிகையை பான் இந்தியா புரமோஷனுக்காகவும் இந்தி பட பிசினஸ்க்காகவும் தேட வேண்டியது தான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தமன்னாவுக்கும் இதே நிலைமை

தமன்னாவுக்கும் இதே நிலைமை

பாகுபலி படத்தில் டாப்லெஸ் ஆக எல்லாம் நடித்த தமன்னா பாகுபலி 2 படத்தில் ஓரங்கட்டப்பட்டு ஒட்டுமொத்த ஸ்கோப்பும் அனுஷ்காவுக்கு கிடைத்த நிலையில், ரொம்பவே அப்செட் ஆனார் என்றும் அப்போது டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவத்தையும் கொடுக்க வேண்டும் என்றும் எடுத்த காட்சிகளை நீக்குவதற்கு அவர்களின் நேரத்தை வீணாக்கமலே இருக்கலாமே என்றும் கருத்துக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X