பாதுகாப்பா இருங்க... வீட்லயே இருங்க... வெதரை என்ஜாய் பண்ணுங்க... பட்டியலிட்ட பாலிவுட் குயின்
மாலத்தீவு : தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்துவரும் நடிகை ஆலியா பட் தற்போது மாலத்தீவில் தன்னுடைய விடுமுறையை கழித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையை தாக்கவுள்ள தக்தே புயலால் வேகமான காற்றடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மும்பை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் இருந்து இந்த வானிலையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆலியா பட் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடுமையான காற்றடிக்கும்
குஜராத்தையடுத்து மகாராஷ்டிரா மற்றும் கோவா உள்ளிட்ட மாவட்டங்களில் தக்தே புயல் தனது தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகமான மழை மற்றும் கடுமையான காற்று உள்ளிட்டவை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் மேற்கொண்டுள்ளன. கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் தங்களது வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்து காணப்படும் நிலையில் அத்துடன் சேர்த்து மக்கள் புயலையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் காணப்படுகிறது.

மும்பை மக்களுக்கு ஆலியா வேண்டுகோள்
இந்நிலையில் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையில் உள்ள பாலிவுட் நடிகை ஆலியா பட், மும்பை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ள அவர், காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்ற வானிலை மைய எச்சரிக்கையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆலியா வேண்டுகோள்
தக்தே புயல் மும்பையை நெருங்கி வருவதால், கடலுக்கு அருகில் செல்வதை தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், மழையையும், வானிலையையும் சிறப்பாக கொண்டாடவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











