லிட்டில் டார்லிங்..ஆலியா பட் வெளியிட்ட பேபி பம்ப் போட்டோ..ஒரு மணிநேரத்தில் பத்து லட்சம் லைக்ஸ்!

மும்பை : பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் சற்று முன்னர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான வயிறை மறைக்கும் விதமாக கொஞ்சம் லூசான ஆடை அணிந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது லிட்டில் டார்லிங்குடன் என வயிற்றில் இருக்கும் குழந்தையை கூறியுள்ளார் இந்த போட்டோ பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

அதோடு கணவர் ரன்பீருடன் அவர் நடந்து செல்லும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஆலியா பட்

ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிரம்மாஸ்திரா

பிரம்மாஸ்திரா

இந்நிலையில், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆலியா பட் தனது கணவர் ரன்பீரும் வந்திருந்தார். கடந்த ஜூன் மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிறகு முதல் முறையாக இருவரும் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அதில் ஆலியா முழு கைகளுடன் பழுப்பு நிற உடையில் தனது அழகான குட்டி வயிறுடன் காணப்பட்டார்.

க்யூட் ஜோடி

க்யூட் ஜோடி

மேலும், ஆலியா பட்டின் முகத்தில் முன்பை விட பளபளப்பு அதிகமாகவே இருந்தது. மேலும், ரன்பீர் கபூர் கருப்பு டி-ஷர்ட்டை மற்றும் கருப்பு பேண்டுடன் விழாவிற்கு வந்திருந்தார். இருவரும் கைகளை கோர்த்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, சமூக வலைத்தளத்தில் இந்த க்யூட் ஜோடியை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X