Alpha Box Office Day 1: ஆல்ஃபா முதல் நாள் வசூல்.. ஆலியா பட் திரை வாழ்க்கையில் விழுந்த பெரிய அடி
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான அலியா பட், நடிப்பில் உருவாகி வெளியான படம் 'ஆல்பா' (Alpha). யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (YRF) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ள இந்த படம் ஏற்கனவே, ஒய்.ஆர்.எஃப் ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் கதாபாத்திரத்தை மைய்யமாக கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகியிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் எதிர்பார்த்ததைப் போல பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸில் கிளிக் ஆகவில்லை என்ற தகவல் தான் பாலிவுட் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படும் தகவலாக உள்ளது.
ஏற்கனவே 'ஏக் தா டைகர்', 'டைகர் ஜிந்தா ஹை', 'வார்', 'பதான்', 'டைகர் 3', 'வார் 2' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ஸ்பை யுனிவர்ஸில், முதல் முறையாக அலியா பட் நடித்த படம் இது. படத்தில் அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ஷார்வரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆல்யா பட்டிற்கு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதனால், முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.
சாக்னில்க் வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட தகவலின்படி, 'ஆல்பா' திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் சுமார் 9 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. படம் முதல் நாள் வசூலில் டபுள் டிஜிட் அளவுக்கு கூட கோடிகளில் வசூலிக்காதது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, இந்த கதாபாத்திரம் குறித்து அலியா பட் மிகுந்த உற்சாகத்துடன் பேசியிருந்தார். "எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் ரசித்து நடித்த படங்களில் 'ஆல்பா'வும் ஒன்று. ஆக்ஷன் உலகில் நுழைந்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. குறிப்பாக, இரண்டு பெண் கதாபாத்திரங்கள் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் கதையை முன்னின்று நடத்துவது என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற கதைகள் அடிக்கடி உருவாகுவதில்லை. இந்த படம் ஒரு முழுமையான ஆக்ஷன் கொண்டாட்டம்" என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications