»   »  ஒரு பேண்ட்டால் காதலர் சித்தார்த்திடம் வரிந்துகட்டி சண்டைக்கு பாய்ந்த நடிகை ஆலியா

ஒரு பேண்ட்டால் காதலர் சித்தார்த்திடம் வரிந்துகட்டி சண்டைக்கு பாய்ந்த நடிகை ஆலியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், அவரது காதலரும், நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே ஒரு பேண்ட்டால் சண்டை வந்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பாலிவுட் நடிகர், நடிகைகள் சக கலைஞர்களுக்கு பிரமாண்ட பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார் கொடுத்த தீபாவளி பார்ட்டிக்கு காதலர்களான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை ஆலியா பட்டும் ஜோடியாக செல்ல திட்டமிட்டனர்.

சித்தார்த் ஆலியாவை அழைத்துச் செல்ல அவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

சிவப்பு பேண்ட்

சிவப்பு பேண்ட்

ஆலியா சிவப்பு நிற ஜிகு ஜிகு பேண்ட், சட்டை அணிந்து பார்ட்டிக்கு கிளம்பியுள்ளார். ஆலியாவின் பேண்ட்டை பார்த்த சித்தார்த் கடுப்பாகி வேறு ஆடை மாற்றி வருமாறு கூறியுள்ளார்.

சண்டை

சண்டை

இந்த பேண்டுக்கு என்ன குறை, இதை தான் அணிந்து வருவேன் என்று ஆலியா கூறியுள்ளார். இதனால் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆலியா

ஆலியா

சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சண்டை போட்ட பிறகு ஆலியா அக்ஷய் குமார் வீட்டு பார்ட்டிக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். கடைசியில் சித்தார்த் தனியாக பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

ஏன்?

ஏன்?

முன்னதாக நடந்த தீபாவளி பார்ட்டிக்கும் ஆலியா அதே சிவப்பு நிற பேண்ட்டை அணிந்து வந்துள்ளார். பார்ட்டியில் நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். மேலும் அவ்வப்போது கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அதனால் தான் சித்தார்த் அவரை வேறு ஆடை அணியுமாறு கூறியுள்ளார்.

English summary
Bollywood couple Alia Bhatt and Sidharth Malhotra fought over a silly reason during festive time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil