அமிதாப் வீட்டு தீபாவளிக்கு யாரெல்லாம் கெஸ்ட்டா போறாங்க தெரியுமா?
இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மீண்டும் அமிதாப் பச்சன் வீட்டில் தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், பாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் விருந்தினர் பட்டியலில் இடம்பெ
Recommended Video
மும்பை: பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அமிதாப் பச்சன் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் பல முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.'

களைகட்டும்
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் வீட்டில் ஆண்டுதோறும் தீபாவளி விழா, பாலிவுட் பிரபலங்கள் புடை சூழ பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அது போன்ற ஒரு பிரம்மாண்ட தீபாவளி விழா அமிதாப் பச்சன் வீட்டில் களைகட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏன் இல்லை
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமிதாப் பச்சன் இல்லத்தில் தீபாவளி விழா கொண்டாடவில்லை. இதற்கு காரணம் 2017ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் அப்பா இறந்துவிட்டார். சம்மந்தி இறந்த சோகத்தில் 2017ம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை அமிதாப் பச்சன் கொண்டாடவில்லை. அதே போல கடந்த 2018ம் ஆண்டு, மகள் ஸ்வேதா பச்சனின் மாமனார் மரணம் அடைந்தார் அதனால், கடந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடவில்லை.

உடல் நலம்
இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட்டம் அமிதாப் பச்சன் வீட்டில் நடைபெறுமா என்ற சந்தேகம் பாலிவுட்டில் எழுந்தது. காரணம் அமிதாப் பச்சனின் உடல்நிலை மோசமானது தான். ஆனால், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று 5 கிலோ எடை வரை குறைத்து, தற்போது குரோர்பதி நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கும் அளவுக்கு அமிதாப் பச்சன் உடல்நலம் முன்னேறியுள்ளது. அதனால், இந்த ஆண்டு எந்த தடையும் இன்றி தீபாவளி விழா கொண்டாட அமிதாப் பச்சன் இல்லம் தயாராகி வருகிறதாம்.

யார் யார்?
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் அஜய் தேவ்கன் - கஜோல், அக்ஷய் குமார் - ட்விங்கிள் கண்ணா, ஷாரூக்கான் - கவுரி கான், கரண் ஜோஹர், ஆனந்த் பண்டிட், கபீர் கான், சஞ்சய் தத், ரன்பிர் கபூர் மற்றும் ஆலியாபாட் என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு நீண்ட விருந்தினர் பட்டியல் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. பாலிவுட் மீடியாக்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில்
பாலிவுட்டில் கொண்டாடுவது போல தமிழ்நாட்டில் மூத்த நடிகர்கள் இல்லத்தில், மற்ற நடிகர்கள் ஒன்று கூடி கொண்டாடுவதில்லை. விழா மேடைகளில் மட்டுமே சந்தித்து கொள்ளும் வழக்கம் கொண்டுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வார்கள்.


Click it and Unblock the Notifications











