இவங்கெல்லாம் மோசமான டிரஸ்ஸுக்காக 'பாராட்டு' வாங்குனவுங்க...!
லண்டன்: லண்டனில் நடந்த பாப்டா விருது வழங்கும் விழாவின்போது மோசமான உடை அணிந்து வந்தவர் என்ற பெயரை ஆலிஸ் ஈவ் தட்டிச் சென்றார். அவர் போட்டிருந்த உடைதான் மகா மட்டமானது என்று அத்தனை பேரும் ஒரு மனதாக 'பாராட்டினர்'.
லண்டனில் நேற்று பாப்டா விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பல்வேறு நடிகர், நடிகையர் திரளாக கலந்து கொண்டனர்.
நடிகையர் அனைவரும் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும், டிசைன் டிசைனாகவும் உடை அணிந்து வந்திருந்தனர். ஆனால் அவர்களில் சிலரது உடைகள் மோசமானவை, ரசணையில்லாதவை என்று பார்வையாளர்களிடம் பாட்டுக்களை வாங்கத் தவறவில்லை.

கவ்விப் பிடித்த தீ ஜூவாலையுடன் ஆலிஸ் ஈவ்
அப்படி பார்வையாளர்களிடம் டேஸ்ட்டே இல்லாமல் உடை அணிந்து வந்தவர் என்ற பாராட்டுக்களை அதிகம் பெற்றவர் ஆலிஸ் ஈவ்தான். கருப்பு நிற உடையில் தீ ஜூவாலைகள் இடம் பெற்றிருந்த உடையில் அவர் வந்திருந்தார். அந்த தீ ஜூவாலைகள் அவரது மார்புகளைக் கவ்விப் பிடிப்பது போல காட்சி தந்தது. பார்க்க வித்தியாசமாக இருந்தாலும், ம்ஹூம் சரியில்லை என்று பெரும்பாலானவர்கள் பார்த்து விமர்சித்தனர்.
31 வயதான இந்த இங்கிலாந்து நடிகை தனது டிரஸ் குறித்துக் கூறுகையில், இது எனக்கு ரொம்பப் பிடித்த உடை. படு கூலானது என்று கூறிச் சமாளித்தார்.

சாரா ஜெஸ்ஸிகா பார்க்கரும் குண்டக்க மண்டக்கதான்
அவர் மட்டுமல்ல சாரா ஜெஸ்ஸிகா பார்க்கரும் கூட குண்டக்க மண்டக்க டிரஸ்ஸில்தான் வந்திருந்தார். அவரும் கருப்பு நிற உடைதான்.

ஹாரி பாட்டர் மெக்கிராய்
ஹாரி பாட்டர் நடிகை ஹெலன் மெக்கிராயும், சுமாரான உடையில்தான் வந்திருந்தார். அவரது உடையும் அதிகமாக ரசிக்கப்படவில்லை.

லூஸ் பிட்டிங் லாரா
லூஸ் பிட்டிங் உடையில் வந்திருந்தார் லாரா பெய்லி.அவர் போட்டிருந்தது கவுன் ஆகும். பளிச்சென்ற ஆரஞ்சு நிற உடையில் அவர் வந்திருந்தார். ஆனாலும் பார்வையாளர்களை அது கவரவில்லை.

ஹெய்லி போட்ட கவுன்
ஹெய்லி அட்வெல் போட்டிருந்த கவுன் கூட அதிகம் பேசப்படவில்லை. அவருக்கு பொருத்தமானதாக அது இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications











