ஓஹோ இதுதான் அழகுல மயங்குறதா?.. நடிகருடன் ஓவர் நெருக்கம்.. மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மாடல் அழகி!
மும்பை: கியாரா அத்வானியை பார்த்து தான் பாலிவுட் ரசிகர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து தவிப்பார்கள். ஆனால், அவருடைய கணவர் சித்தார்த் மல்கோத்ராவின் அழகில் மயங்கி பிரபல மாடல் அழகி பார்த்த வேலை ரசிகர்களை ஷாக் ஆக்கி விட்டது. கியாரா அத்வானியும் அவர் மேடையில் தனது கணவருடன் செய்த செயல்களை பார்த்து நிச்சயம் கடுப்பாகி இருப்பார் என்று தான் தெரிகிறது.
பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவுடன் நடிகை கியாரா அத்வானி விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது. ரகசியமாக எல்லாம் காதலிக்க முடியாது என நினைத்த இருவரும் சட்டென திருமணத்தை செய்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் படு பிசியாக இருவரும் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தான் இந்த டிராமா அரங்கேறியது.
கியாரா அத்வானி கணவர்: ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வரும் நடிகை கியாரா அத்வானி அடுத்ததாக யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து கியாரா அத்வானி திருமணம் செய்த நிலையில், பாலிவுட்டின் சூப்பர் ஜோடியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கியாரா அத்வானியின் கணவருடன் மாடல் அழகி ஓவர் நெருக்கம் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அழகுல மயங்கிய அலிசியா: பிரபல மாடல் அழகி அலிசியா கவுர் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு சித்தார்த் மல்கோத்ராவுடன் ரேம்ப்வாக் செய்தார். அப்போது சித்தார்த்தின் அழகில் மயங்கி அவரது கன்னங்களை தடவி கிஸ் அடிப்பது போல ரொம்பவே எல்லை மீற ஆரம்பித்து விட்டார்.
கடுப்பான சித்தார்த்: ஆனால், அலிசியாவின் அத்துமீறல்களை ரசித்து அவருடன் ஆட்டம் போடாமல் சித்தார்த் தனது முகத்தில் கடுப்பை காட்டியது கேமராவில் பதிவான நிலையில், இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஏகப்பட்ட ரசிகர்கள் அலிசியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியும் மீம் போட்டும் விளாச தொடங்கி விட்டனர்.
மன்னிச்சிடு கியாரா: அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்த அலிசியா இந்த விவகாரம் பெரிதானதை அறிந்து மன்னிச்சிடு கியாரா என கேப்ஷன் போட்டு வெளியிட்டுள்ள போஸ்ட் மேலும், ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. மேலும், கியாரா அத்வானியை சீண்டும் விதமாக சித்தார்த்துடன் இணைந்து '365 டேஸ்' ரீமேக்கில் அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











