இதை எப்படி திரையிட முடியும்? இரண்டாம் குத்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.. பைக் ரேசர் கோரிக்கை!

By

சென்னை: இரண்டாம் குத்து படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருந்த படம்,இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இப்போது இதன் இரண்டாம் பாகம், இரண்டாம் குத்து என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் டேனியலும் சந்தோஷ் ஜெயகுமாரும் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 முகம் சுளிக்க

முகம் சுளிக்க

இந்நிலையில், சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில் ஆபாச மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக உள்ளன. இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

பார்க்கவே கூசினேன்

பார்க்கவே கூசினேன்

அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

கிடுக்கிப்பிடி வேண்டும்

கிடுக்கிப்பிடி வேண்டும்

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்று கூறியிருந்தார்.

கூசாத கண்ணு

கூசாத கண்ணு

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பதில் தெரிவித்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் பட ஸ்டில்லை பதிவிட்டு, 'இந்தப் படத்தை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அலிஷா அப்துல்லா

அலிஷா அப்துல்லா

இந்நிலையில், இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும் என்று பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். இவர், பிரபல பைக் ரேஸர் அப்துல்லாவின் மகள். நடிகர் அதர்வாவின் இரும்புக் குதிரை படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தடை செய்யுங்கள்

தடை செய்யுங்கள்

அவர் தனது ட்விட்டர் பதிவில், இரண்டாம் குத்து படத்தின் டிரைலரை பார்த்தேன். இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படங்களை எப்படி திரையிட முடியும்? என்று கேட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் அலுவலகத்துக்கு டேக் செய்து, இதுபோன்ற படங்களை தயவு செய்து தடைசெய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X