twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன ’நான்சென்ஸ்’ இதெல்லாம்.. அஜித்தையும் என்னையும் பற்றி தப்பா பேசுவதா.. பொங்கிய பைக் ரேஸர்!

    |

    சென்னை: தன்னையும் நடிகர் அஜித் பற்றியும் எப்படி தப்பாக பேசலாம் என பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசித் தள்ளியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    பைக் ரேஸர் ஆன அலிஷா அப்துல்லா, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

    இந்நிலையில், நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசிய வீடியோவை ஷேர் செய்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அலிஷா.

    அஜித்தை பற்றி

    அஜித்தை பற்றி

    சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் ஏன் சினிமா விழாக்கள் மற்றும் பேட்டிகளில் பங்கேற்பதில்லை என்ற கேள்வியை கேட்டு, அதற்கான விடையாக, ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, நடிகர் அஜித் ஒரு முறை பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, அவரை நடக்கவே விடாமல் கூட்டம் அலைமோதியது தான் காரணம் எனக் கூறி சமூக வலைதள ரசிகர்கள் மத்தியில் வைரலானார்.

    பைக் ரேஸர்

    பைக் ரேஸர்

    இந்தியளவில் பிரபல பெண் பைக் ரேஸராக திகழ்ந்து வருகிறார் அலிஷா அப்துல்லா. பைக் மற்றும் கார் ரேஸ்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் நடிகர் அஜித்துடன் அவருக்கு நல்ல நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் அவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமாவில்

    தமிழ் சினிமாவில்

    இயக்குநர் யுவராஜ் போஸ் இயக்கத்தில் அதர்வா, பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான இரும்பு குதிரை படத்தில் பைக் ரேஸராக நடித்து இருப்பார் அலிஷா அப்துல்லா. அந்த படத்தில் வில்லனாக 7ம் அறிவு வில்லன் ஜானி ட்ரி நியூகனும் நடித்திருப்பார். அதன் பிறகு விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்திலும் அலிஷா நடித்துள்ளார்.

    மனித உரிமை ஆணையம்

    மனித உரிமை ஆணையம்

    சமீபத்தில் நடிகையும் பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லாவுக்கு தேசிய மனித உரிமை குற்ற மற்றும் ஊழல் தடுப்பு பணியகத்தின் தமிழ்நாடு மாநில பெண்கள் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாகத் தான் தவறான தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி இருக்கிறார் என அலிஷா சாடியுள்ளார்.

    அஜித் காலில் விழுந்து

    அஜித் காலில் விழுந்து

    அந்த வீடியோவில், நடிகர் அஜித்தால் தான் தனக்கு இந்த பதவி கிடைத்தது என அவர் வீட்டுக்கு நேரடியாக சென்று அலிஷா அப்துல்லா அஜித்தின் காலில் விழுந்து நன்றி தெரிவித்ததாக கூறியுள்ளார். இது முற்றிலும் அப்பட்டமான வதந்தி என்றும், எப்படி இப்படி பொய்யான செய்தியை வெளியிடலாம் என வெளுத்து வாங்கி இருக்கிறார்.

    நான் சென்ஸ்

    நான் சென்ஸ்

    மேலும், இதை பொறுத்துக் கொண்டு தன்னால் சும்மா இருக்க முடியது என்றும், என்ன ஒரு ‘நான்சென்ஸ்' ஆன செயல் இது, என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அலிஷா விளாசி தள்ளி இருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் குறித்து, எந்தவொரு ஆதாரமும் இன்றி எப்படி இப்படி தவறாக பேசலாம் என்றும் திட்டித் தீர்த்து இருக்கிறார்.

    English summary
    She recently hit back at a news website for spreading wrong information about her and Ajith. recently hit back at a news website for spreading wrong information about her and Ajith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X