twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அலிஷா அப்துல்லாவால் ட்விட்டரில் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்

    By Siva
    |

    சென்னை: கத்தி படத்தை பார்த்துவிட்டு விஜய் ரசிகையாகிவிட்டேன் என பைக் ரேசரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா ட்வீட் போட்டதை பார்த்து அஜீத், விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    நாட்டின் ஒரே பெண் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா(25). சென்னையைச் சேர்ந்த அவர் பேட்டிகளில் அஜீத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இந்நிலையில் அவர் கத்தி படத்தை பார்த்துள்ளார்.

    படம் பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்தார்.

    விஜய் ரசிகை

    நான் எந்த ஒரு நடிகரின் ரசிகையாகவும் இருந்தது இல்லை. ஆனால் இன்று கத்தி படத்தை பார்த்த பிறகு நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகையாகிவிட்டேன். உணர்ந்து நடித்துள்ளார் என்று அலிஷா ட்வீட் செய்தார்.

    அஜீத் ரசிகர்கள்

    அஜீத் ரசிகர்கள்

    அலிஷாவின் ட்வீட்டை பார்த்த அஜீத் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். தல ரசிகை என்று இத்தனை நாட்கள் சொல்லிவிட்டு இப்படி பேச்சை மாற்றுகிறீர்கள். வெட்கப்படுகிறோம் என்று அஜீத் ரசிகர்கள் திட்ட பதிலுக்கு விஜய் ரசிகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்து அலிஷாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டனர்.

    அலிஷா

    அஜீத் சார் எப்பொழுதுமே என் குரு. படங்கள் மற்றும் ரேசிங்கில் அவரது கடின உழைப்பை வணங்குகிறேன். எந்த சர்ச்சையையும் விரும்பவில்லை என்று அலிஷா தெரிவித்துள்ளார்.

    பிரபலம்

    நான் எந்த பிரபலத்தின் பெயரையும் பயன்படுத்தி புகழ் பெறவில்லை. என் துறையில் நான் 8 வயதில் இருந்தே கடினமாக உழைக்கிறேன். அஜீத் சார் என் குரு, என் இன்ஸ்பிரேஷன் என்று அலிஷா தெரிவித்துள்ளார்.

    English summary
    Racer turned actress Alisha Abdullah's tweet praising Vijay kindles war between Ajith and Vijay fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X