'அம்மா'வுக்காக தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் நாளை மூடல்

By Siva

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

All 4 shows in TN theaters will be suspended tomorrow

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரம் இருக்கிறார்கள்.

இதற்கிடையே ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அனைத்து உணவகங்களும் நாளை மூடப்படும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X