தஞ்சாவூர் தமிழச்சி.. டாக்டர்.. ராப் இசை கலைஞர்.. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஐக்கி பெர்ரி யாரு?

சென்னை: பார்க்க ஃபாரீன் ரிட்டர்ன் பொண்ணு மாதிரி இருந்தாலும் பிக் பாஸ் சீசன் 5ல் 15வது போட்டியாளராக நுழைந்துள்ள ஐக்கி பெர்ரி நம்ம தஞ்சாவூர் பொண்ணு தாங்க..

Recommended Video

Bigg Boss 5 Contestant Model Akshara Reddy Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

மருத்துவரான இவர் ராப் இசை கலையில் கொண்ட ஆர்வத்தால் தனது நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டார்.

ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு தினுசா இருக்காங்களே என ரசிகர்கள் மட்டுமில்லை உள்ளே உள்ள போட்டியாளர்களும் பெரிதளவில் குழம்பிப் போயுள்ளனர்.

நிஜ பெயர் என்ன

நிஜ பெயர் என்ன

அப்பா அம்மா ஐக்கியா என ஐக்கியத்தின் பொருளை உணர்த்தும் வகையில் சற்று மாடலாக வைத்த பெயரை ஐக்கி பெர்ரி என்றே மாற்றிக் கொண்டார் நம்ம தஞ்சாவூர் பொண்ணு. இசை துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்ட நிலையில், ராப் இசை கலைஞராக வேண்டும் என்கிற தனது முயற்சியில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளார்.

காஸ்மெடிக் சர்ஜரியன்

காஸ்மெடிக் சர்ஜரியன்

ராப் இசை கலையில் மட்டுமின்றி படிப்பிலும் கெட்டிக்காரியான ஐக்கி பெர்ரி காஸ்மெடிக் சர்ஜரியன் மருத்துவர் என்பது கூடுதல் தகவல். பல சினிமா பிரபலங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்களையும் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரம்யா என்.எஸ்.கே தான் குரு

ரம்யா என்.எஸ்.கே தான் குரு

பிரபல பின்னணி பாடகியும் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளருமான ரம்யா என்.எஸ்.கே தான் இவருக்கு இசை குரு என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியிலும் அதன் பின்னர் இவர் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.

ஐபோன் காதலி

ஐபோன் காதலி

2016ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி ஐக்கி பெர்ரியின் முதல் இசை ஆல்பம் வெளியானது. டாக்டர் டெஸ் புரொடக்‌ஷன் அந்த ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டது. தொடர்ந்து ஏகப்பட்ட ராப் இசை பாடல்களை வெளியிட்டு வந்த ஐக்கி பெர்ரி, கடந்த 2018ல் ஐபோன் காதலி எனும் குறும்படத்தில் நடித்து சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானார்.

சமூக ஆர்வம்

சமூக ஆர்வம்

புரட்சி கருத்துக்களை ராப் இசை பாடலாக மாற்றி பாடி வரும் டாக்டர் ஐக்கி பெர்ரிக்கு சமூக சேவையிலும் அதிக ஆர்வம் உள்ளது. கொரோனா காலத்தில் இவரும் ஏகப்பட்ட உதவிகளை தன் பங்கிற்கு செய்துள்ளார். இந்த பிக் பாஸ் சீசனில் ஐக்கி பெர்ரி எப்படி அசத்தப் போகிறார் என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X