லாஸ்லியா ஹீரோ.. பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் 9வது போட்டியாளராக அறிமுகமான நடிகர் ஆரி அர்ஜுனா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக நடிகர் ஆரி அர்ஜுனா கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது மிரட்டலான என்ட்ரி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
என்னடா லாஸ்லியா கூட படம் நடிச்சுட்டு இருந்தாரே, டக்குன்னு பிக் பாஸ் வீட்டுக்கு வந்துட்டாரே என ரசிகர்கள் அவரது வருகையை ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக நடிகர் ஆரி அர்ஜுனா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களுக்கு ஃபிட்னஸ் டிரெய்னராக
நடிகர் ஆரி அர்ஜுன், சினிமா பிரபலங்களுக்கு எல்லாம் ஃபிட்னஸ் டிரெய்னராக இருந்தவர். பின்னர், நாமே நல்லாத்தானே இருக்கோம். ஏன் நடிக்கக் கூடாது என 'ஆடும் கூத்து' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 2005ம் ஆண்டு இயக்குநர் சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சேரன், நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முத்து என்கிற கதாபாத்திரத்தில் ஆரி நடித்துள்ளார்.

ஏகப்பட்ட படங்கள்
தொடர்ந்து ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, தரணி, மாயா, உன்னோடு கா, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான், அலேக்கா மற்றும் டைட்டில் வைக்காத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

நெடுஞ்சாலை தந்த அங்கீகாரம்
சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரி நடித்த நெடுஞ்சாலை திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதுகளையும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. தார்பாய் முருகனாக நடித்த ஆரிக்கு ஜோடியாக ஷிவடா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெயர் மாற்றம்
நடிகர் ஆரி என்றே அழைக்கப்பட்டு வந்த இவர், இந்த ஆண்டு புத்தாண்டு முதல் ஆரி அர்ஜுனா என தனது பெயரை மாற்றிக் கொள்ளப் போவதாக அறிவித்தார். நடிகர் ஆரி, ஆரி அர்ஜுனாவாக மாறிய நேரம் அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராகும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோட்சூட்டில் அசத்தல் என்ட்ரி
விதைகளில் மரபணு மாற்றம் செய்வது எவ்வளவு மோசமான விஷயம் என்பதை நடிகர் ஆரி அர்ஜுனா அழகாக கமல் சார் முன் பேசினார். கோட் சூட்டில் பக்காவான என்ட்ரி கொடுத்த அவரை சாப்பிட்டுக் கொண்டே எல்லாரும் ஹாய் சொல்லி வெல்கம் பண்ணினார்கள். செல்லக்குட்டி என நடிகை ரேகாவும் கட்டித் தழுவி நடிகர் ரியோ ராஜும் வரவேற்றனர். இந்த பிக்பாஸ் வீட்டில் அடுத்த 105 நாட்கள் இவர் நீடித்து டைட்டில் வெல்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லாஸ்லியாவுடன்
கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா நடிக்கும் புதிய படம் ஒன்றில் ஆரி அர்ஜுனா தான் ஹீரோ. நடிகை லாஸ்லியா மற்றும் சிருஷ்டி டாங்கே அந்த படத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் உருவாகி வந்த அந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரண்ட்ஷிப் படத்தை முடித்த பின்னர் தான் லாஸ்லியாவும் அந்த படத்தில் நடிக்க வருவார் என தெரிகிறது. அந்த கேப்பை நிரப்ப நடிகர் ஆரி அர்ஜுனா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











