பிக் பாஸ் போட்டியாளர் சுட்டிக் குழந்தை கேப்ரில்லா இப்படி கவர்ச்சி புயலா என்ட்ரி கொடுத்துருக்காரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிரம்மாண்ட ஓப்பனிங் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
Recommended Video
இளம் நடிகையான கேப்ரில்லா அசத்தல் நடனத்துடன் அரங்கையே அதிர வைத்து என்ட்ரி கொடுத்தார்.
குழந்தை நட்சத்திரமாக தனுஷின் 3 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேப்ரில்லா.

11வது போட்டியாளர்
11வது போட்டியாளராக சுட்டிக் குழந்தையாக வருவார் என பார்த்தால் கவர்ச்சி புயலாக கலந்து கொண்டு அசத்தல் நடனத்துடன் அறிமுகமானார் கேப்ரில்லா. இவருக்கு நடனம் என்றால் ரொம்ப உயிராம். ஸ்லீவ் லெஸ் உடையில் படு கிளாமராக வந்த கேபியை உற்சாகமாக வரவேற்றார் உலகநாயகன் கமல்ஹாசன்.

3 படத்தில் அறிமுகம்
நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான '3' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரமான ‘சுமி' ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேப்ரில்லா. பிக் பாஸ் மேடையில் கமலுடன் பேசிய அவர், தனது முதல் படத்திலேயே, ஸ்ருதிஹாசன் உடன் நடித்தது பற்றி பேசி மகிழ்ந்தார்.

அப்பா
நடிகர் தனுஷின் 3 படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்ததாக சென்னையில் ஒரு நாள் படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் சசிகுமார் தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கி நடித்த அப்பா படத்தில் ரஷிதா பானு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதற்கு பிறகு எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது பிக்பாஸ் போட்டியாளராக மாறி உள்ளார்.

டான்ஸ்னா உயிர்
மேலும், விஜய் டிவியில் 2009ம் ஆண்டு ஒளிபரப்பான ஜோனி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னர் ஆனவர் கேப்ரில்லா. 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பான 7ம் வகுப்பு சி பிரிவு எனும் தொடரில் பள்ளி மாணவியாக நடித்தார். ஜோடி நம்பர் சீசன் 6ல் கலந்து கொண்டும் வெற்றிப்பெற்றார். இப்போ மீண்டும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள இவர், டைட்டிலை வின் பண்ண நிறைய வாய்ப்புகள் உள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலம்
இளம் நடிகையான கேப்ரில்லா இந்த லாக்டவுன் நேரத்தில் ரசிகர்களை தன் பக்கம் கவர்வதற்காக ஏகப்பட்ட போட்டோஷூட்கள் நடத்தி கவர்ச்சிகரமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இனிமே காலையில் பிக்பாஸ் வீட்டில் எழுந்தவுடன் மரண குத்து குத்தப் போவதில் இவரும் ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

வண்ண நிலவே வருக
கமலிடம் அனுமதி பெற்று, பூச்செடியை கையில் ஏந்திக் கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லாவை பார்த்த பாடகர் வேல்முருகன், வண்ண நிலவே வருக வசந்த மங்கையே வருக என கவிதையால் செம வரவேற்பு கொடுத்தார். நடிகர் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரும் கேபியை சூப்பராக வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











