முதல் காதலி.. இரண்டாம் தாரம்.. நடிகர் நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்த ஆலியாவின் முழு கதை!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரும் பேட்ட படத்தின் வில்லனுமான நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்ய முன்வந்துள்ள ஆலியா யார் என்பது பற்றித் தான் தற்போது பலரும் கூகுளில் ஆர்வத்தோடு தேடி வருகின்றனர்.
Recommended Video
கடந்த 1999ம் ஆண்டு வெளியான அமீர்கானின் சர்ஃப்ரோஷ் படத்தில் தீவிரவாதியாக ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நவாசுதீன் சித்திக்.
பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த அவர், தனது விடா முயற்சியாலும் திறமையான நடிப்பாலும் பாலிவுட்டின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

முதல் மனைவி
இந்தியளவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் விவாகரத்து விவகாரத்தை அவர் சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே நவாசுதீன் சித்திக்குக்கு ஷீபா எனும் பெண்ணுடன் திருமணம் ஆகி அந்த திருமணம் சில வருடங்களில் இதே போல விவாகரத்தை சந்தித்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் காதல்
தற்போது நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரி உள்ள அவரது இரண்டாவது மனைவி ஆலியாவுக்கும், நவாசுதீன் சித்திக்குக்கும் 25 ஆண்டுகள் உறவு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆகி 10 ஆண்டுகளும், அதற்கு முன்னதாக 15 ஆண்டுகளும் இருவரும் நண்பர்களாகவும், காதலர்களாகவும் பழகி வந்துள்ளனர்.

நிஜப் பெயர்
நவாசுதீன் சித்திக்கின் இரண்டாவது மனைவியின் பெயர் ஆலியா இல்லை. அவருடைய நிஜப் பெயர் அஞ்சனா கிஷோர் பாண்டே. நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்த ஆலியா, "நான் எனது நிஜப் பெயரான அஞ்சனா கிஷோர் பாண்டேவாக மீண்டும் மாறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்காக அஞ்சனா ஆலியாவாக பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணர் வேஷம்
முதல் மனைவியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துக் கொண்ட நடிகர் நவாசுதீன் சித்திக், இரண்டாவது மனைவியாக ஆலியாவை 2009ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். பிரிந்து போன முதல் காதல் இருவருக்குள்ளும் மீண்டும் மலர அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. அதில் இளைய மகன் கிருஷ்ணராக வேடம் போட்ட படத்தை நவாசுதீன் சித்திக் ஷேர் செய்திருந்தது வைரலானது.

சினிமா தயாரிப்பாளர்
பெயர் மாற்றம், முதல் காதல், இரண்டாம் தாரம் மட்டுமின்றி ஆலியா ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல். Holy Cow எனும் ரிவால்வர் ராணி, கிஸ்மத் கனெக்ஷன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சாய் கபீர் அந்த படத்தை இயக்கி வருகிறார். நவாசுதீன் சித்திக்கும் அதில் கேமியோ ரோல் செய்துள்ளார். இந்த விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு திட்டமிட்டபடி அந்த படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒத்த செருப்பு ரீமேக்கில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்திருந்த நவாசுதீன் சித்திக், அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிக்கப் போவதாக லாக்டவுனுக்கு முன்னதாக நடிகர் பார்த்திபன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











