த்ரிஷாவை அன்ஃபாலோ பண்ணு.. மீனாக்ஷியை ஃபாலோ பண்ணு.. அதிரடியாக மாறிய விஜய் ரசிகர்கள்.. யாரும்மா நீ!
சென்னை: தளபதி 68ல் நடிகர் விஜய்க்கு பிரியங்கா மோகன் தான் ஜோடியாவார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக மீனாக்ஷி சவுத்ரி தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடிப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிரடியாக அவரை கடந்த ஒரு வருடமாக ஃபாலோ செய்து வந்த நிலையில், தற்போது மீனாக்ஷியை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராமில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் நடித்த படங்கள் குறித்த தகவல்களையும் கூகுளில் தேடி அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

26 வயசு பேரழகி: ஹரியானா பாஞ்ச்குலாவில் ராணுவ வீரர் பி.ஆர். சவுத்ரிக்கு மகளாக 1997ல் பிறந்த மீனாக்ஷி சவுத்ரிக்கு தற்போது 26 வயதாகிறது. பஞ்சாபில் பல் மருத்துவம் படித்த மீனாக்ஷி சவுத்ரி 2017ம் ஆண்டு IMA எனப்படும் இந்தியன் மிலிட்டரி அகாடமி நடத்திய மிஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். அதன் பின்னர் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 டைட்டிலையும் தட்டித் தூக்கினார்.

சினிமா வாய்ப்பு: பிபிசியின் அவுட் ஆஃப் லவ் வெப்சீரிஸில் 2020ம் ஆண்டு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், சினிமாவில் அறிமுகமானார் மீனாக்ஷி சவுத்ரி. டோலிவுட்டில் கில்லாடி, ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே விலகிய நிலையில், இவர் தான் நடித்து வருகிறார். இந்நிலையில், தளபதி 68 படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்: இன்ஸ்டாகிராமில் இவருக்கு தற்போது 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கொஞ்ச நாள் வரை குறைவான ஃபாலோயர்களே இருந்த நிலையில், தளபதி படத்தில் கமிட் ஆன நிலையில், அதிரடியாக இவருக்கு ரசிகர்கள் சேர்ந்து வருவதாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவாக ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை போட்டு இளைஞர்களை ஈர்த்து வரும் மீனாக்ஷி சவுத்ரி தான் தற்போது தளபதி ரசிகர்களின் நெக்ஸ்ட் கிரஷ் ஆக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











