மங்காத்தாடா.. தல அஜித் ஆடிய மாஸ் கேம்.. கிளாஸ் பாடல்களை போட்டு யுவனும் ஸ்கோர் பண்ணியிருப்பாரு!
சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தொலைக்காட்சிகளும் அஜித் படங்களை களமிறக்கி ரசிகர்களை டிவிக்கு முன் கட்டிப் போட்டுள்ளனர்.
Recommended Video
காலையிலேயே சன் டிவியில் மங்காத்தா படத்தை ஒளிபரப்பி ஒட்டுமொத்த தல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் தல ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இன்றும் நிலவ பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான சில காரணங்களை இங்கே பார்ப்போம்.

மாஸ் கேம்
தல அஜித் ஹீரோவா? வில்லனா? என்று தெரியாத அளவுக்கு நெகட்டிவ் ஷேடில் தனது நடிப்பால் பின்னி எடுத்திருப்பார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி, வைபவ், ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி என பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். ராஜாவாக தன்னை நினைத்துக் கொண்டு செஸ் கேம் மூலமாகவே பக்காவாக ஸ்கெட்ச் போடும் அந்த காட்சி கூஸ் பம்ப்ஸ் மொமென்ட் தான்.

யுவன் மேஜிக்
இப்படியொரு மாஸ் படத்தில் கிளாஸான பல பாடல்களை அமைத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனியாக ஸ்கோர் செய்திருப்பார். மங்காத்தாடா எனும் தீம் மியூசிக்கில் மிரட்டிய யுவன் சங்கர் ராஜா, "என் நண்பனே", "வாடா பின்லேடா". "நீ நான்", "பல்லே லக்கா", "விளையாடு மங்காத்தா" என ரக ரகமான பாடல்களை போட்டு கலக்கி இருப்பார்.

மத்தவங்களுக்கும் ஸ்பேஸ்
ஹீரோ சென்ட்ரிக் படங்கள் என்றாலே, கதை மொத்தமும் ஹீரோவை சுற்றியே நகரும், அதிக காட்சிகளில் அந்த ஹீரோவே ஆக்கிரமிக்க ஆசைப்படுவார். ஆனால், வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தின் கதையை கேட்ட நடிகர் அஜித், மற்றவர்களுக்கும் ஸ்கோர் செய்ய நிறைய இடங்கள் இருப்பதை அறிந்தும், இந்த கதை வெற்றிப் பெறும் என நினைத்து நடிக்க சம்மதித்ததே படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு காரணம்.

கிரிக்கெட் சூதாட்டம்
இளைஞர்களின் இதயத் துடிப்பை நன்கு கணித்து சென்னை 28, கோவா என படங்களை இயக்கி வெற்றிகளை குவித்த வெங்கட் பிரபு, தல அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை படு மாஸாக இயக்கி இருந்தார். இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் கிரிக்கெட் மற்றும் அதில் நடக்கும் சூதாட்டம், அதில் கிடைக்கும் பணம், அதை கடத்த ஒரு போலீஸ் அதிகாரியே திட்டமிடுதல் என வித்தியாசமாக அமைந்த கதை தான் மங்காத்தாவின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம்.

பைக் வீலிங்
ஆரம்பத்தில் ஜீப்பை பறக்கவிட்டு போலீஸ் அதிகாரியாக நடிகர் வைபவ்வை காப்பாற்றும் விநாயகமாக அஜித் என்ட்ரி டக்கரான ஓப்பனிங் கொடுப்பார். பின்னர், ஒரு காட்சியில் நடிகர் வைப்பவை பைக்குக்கு பின்னால் உட்கார வைத்து, ஒற்றை வீலில் தெறி மாஸாக நடிகர் அஜித் பைக் ஓட்டும் காட்சிக்கு தியேட்டரில் விசில் சத்தம் பலரது காதுகளை பஞ்சர் செய்திருக்கும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்
மங்காத்தா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தளபதி விஜய் அப்போது விசிட் செய்து பார்த்திருந்தார். சமீபத்தில், அந்த அரிய புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தல தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருந்தார். அஜித் - அர்ஜுனுக்கு பதிலாக அஜித் - விஜய் மங்காத்தா படத்தில் நடித்திருந்தால், சூப்பராக இருந்திருக்கும் என்றும் இரண்டாம் பாகத்தில் ஆவது இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தா 2
தல அஜித் படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இரண்டாம் பாகமாக மங்காத்தா 2 இருக்கிறது. கடைசி வரை வில்லனாகவே அசத்திய நடிகர் அஜித், போலீஸ் கைகளில் சிக்காமல், கிளைமேக்ஸில் எஸ்கேப் ஆகும் காட்சி, இரண்டாம் பாகத்திற்கு வலி வகுத்திருக்கும். அதன் காரணமாக மங்காத்தா படத்தின் 2ம் பாகத்திற்கு தல ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்கில் உள்ளனர். வெங்கட் பிரபுவும் ரெடி தான். தல தலையாட்டினால் மட்டும் போதும்.


Click it and Unblock the Notifications











