மாற்றி புரிந்துகொள்ளப்பட்ட நரேன் கதாபாத்திரம்...ஜெய்பீம் ராசாகண்ணு நரேனை சந்தித்தால் ?

சென்னை : அண்மையில் சோனி ஓ.டி.டி யில் வெளியாகி வித்யாசமான கருத்துக்களை கொண்டிருக்கும் படம்தான் "என்னங்க சார் உங்க சட்டம்".

Recommended Video

Yennanga Sir Unga Sattam Review by Poster Pakiri | Filmibeat Tamil

முதல் பாதியில் ஒரு கதையையும் இரண்டாவது பாதியில் மற்றொரு கதையையும் ஒரு இயக்குனர், தயாரிப்பாளரிடம் சொல்வதைப் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த படம் பலத்த சர்ச்சையை சந்தித்துள்ளது.

ஒவ்வொரு ஜாதிக்கு என்று தனித்தனியாக படம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இட ஒதுக்கீட்டில் அனைத்து ஜாதியிலும் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை மிக அழகாக இந்த படம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்றே பலரும் சொல்லி வருகின்றனர் .

 முழுவதுமாக புரிந்து

முழுவதுமாக புரிந்து

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, புரட்சிகர சட்டத்தை புரிந்துகொண்ட விமர்சகர்களும் ரசிகர்களும் அதை கொண்டாடுகின்றனர்.அதேவேளையில் படத்தில் எஸ்.சி கோட்டாவில் வேலை பெறும் நரேன் பாத்திரத்தின் தன்மையை முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாமல் இன்னொரு பக்கம் வரைட்டியான பதிவுகளை சிலர் கொடுத்து வருகின்றனர் என்பதே உண்மை.

 வரமுடியாமல் அவஸ்தை

வரமுடியாமல் அவஸ்தை

வறுமையில் படித்து,பகுதிநேரமாக கால் டாக்சி ஒட்டிக்கொண்டு, டி.என்.பி.சி நேர்முகத் தேர்வுக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கும் நரேன் கதாபாத்திரம்,எதிர்பாராத விபத்தினால், நேர்முகத் தேர்விற்கு, வரமுடியாமல் அவஸ்தைபடுகிறது.இன்டர்வியூ நடத்தும் ஆபீஸர்களிடம் தனது இக்கட்டான நிலையை போன் மூலம் எடுத்துச் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின்,வலியை உணர்ந்த இன்டர்வியூ ஆபீசர் ரோகினி, தன் அதிகாரத்திற்கு உட்பட்டு வீடியோ கான்பரன்சிங்கில் அரசு பணிக்கான இன்டர்வியூவை நடக்க வைத்து,அதன் மூலம் நரேன் கதாபாத்திரம் அதன் உரிமையான வேலையை பெறுகிறது.

 பிள்ளைகளுக்கு இந்த கோட்டாவில்

பிள்ளைகளுக்கு இந்த கோட்டாவில்

வீடியோ கான்பரன்சிங் மூலம் தான் தேர்வு செய்யப்பட காரணமாக இருந்த ரோகினி கதாபாத்திரத்திற்கு ஏதாவது செய்ய நினைக்கும் நரேனுக்கு, ரோகினி கதாபாத்திரம், இவ்வாறான அறிவுரையை வழங்குகிறது, "நீங்க ஏதாவது எனக்கு செய்யணும்னு நினைச்சீங்கன்னா,தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கோட்டாவில் வேலைக்கு சேர்க்காதீர்கள்,உங்க சாதியிலேயே பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டு, வறுமையில் இருக்கிற ஒரு ஏழைக்கு விட்டுக் கொடுங்கள்" என்று சொல்கிறது.

 வசதியானவர்களுக்கு மானியம்

வசதியானவர்களுக்கு மானியம்

இதை நிறைய விமர்சகர்களும், பொதுமக்களும் மாற்றிப் புரிந்து கொண்டதாகவே தெரிகிறது.நரேன் கேரக்டரை போன்ற ஒருவர்,வேலை கிடைத்ததும்,எஸ்.சி.எஸ்.டி கோட்டாவை கேன்சல் செய்ய வேண்டும் என்பதாக திரித்து புரிந்து கொள்ளப்படுகிறது.இது, வசதியானவர்கள் மனிதாபிமானத்துடனும் புரிதலுடனும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில்,கேஸ் மானியத்தை விட்டுக் கொடுப்பதைப் போன்றதே.

இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் எஸ்.சி.எஸ்.டி கோட்டாவில் வேலை பெற்ற நரேன் கதாபாத்திரம்,அவருடைய குழந்தைகளுக்கு எஸ்.சி.எஸ்.டி கோட்டாவில் வேலை தேடாமல், அவர் சார்ந்த சாதியிலேயே, பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் ஒரு நபருக்கு, வேலையை விட்டு கொடுப்பதாகும்.

 மௌனகுரு விஜயன்

மௌனகுரு விஜயன்

எப்படி இருப்பினும் இரண்டாம் பாதியில் இன்டர்வியூ ஆபீஸராக வரும் ரோகினியும்,நரேன் கதாபாத்திரமும் மிகச்சரியாக அவர்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.இதில் நரேன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜயன், ஏற்கனவே "மௌனகுரு" என்ற படத்திலும் முக்கியமான நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார்.இதுதவிர காதல், வழக்கு எண் படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேலின், "யார் இவர்கள்"என்ற படத்தில் கதையின் ஐந்து நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.இந்தப் படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

 ராசாக்கண்ணு நரேன்

ராசாக்கண்ணு நரேன்

ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தின் பல இன்னல்களை தோலுரித்துக் காட்டி ராசாக்கண்ணு எனும் கதாபாத்திரம் மூலம் இருளர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வலியையும் மிகப்பெரிய அளவில் உணர்த்தியிருக்கிறது. ஜெய்பீம்படத்தின் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் மற்றும் "என்னங்க சார் உங்க சட்டம்" படத்தில் நடித்த விஜயன் (நரேன் கதாபாத்திரம்) இருவரும் சந்தித்துக் கொண்டால் எப்படிப்பட்ட உரையாடலாக இருக்கும் என்று பலவகையில் யோசிக்கத் தோன்றுகிறது .

 இதனுடைய ஆடியன்ஸ்

இதனுடைய ஆடியன்ஸ்

உண்மையில் இரண்டு கதாபாத்திரமும் சமூகத்தின் மீது கொண்ட கோபம், பயம், வெறுப்பு அத்தனையும் பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் ஆகும். ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் இல் வெளிவந்துள்ளது. "என்னங்க சார் உங்க சட்டம்" சோனி லைவ் ஓ டி டி இல் வந்துள்ளது. இதனுடைய ஆடியன்ஸ் லெவல் ரீச் என்பதுதான் இந்த படத்தின் நடித்த கதாபாத்திரங்களில் வெற்றியை நிர்ணயிக்கிறது.

 வெவ்வேறு கோணங்களில் அலசி

வெவ்வேறு கோணங்களில் அலசி

சமூகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் இரண்டு கதாபாத்திரங்கழும் மிக மிக முக்கியமாகும். அரசியல் ரீதியாக ஜெய் பீம் திரைப்படம் வெளி வந்த பிறகு எத்தனையோ மாற்றங்களை அரசியல் தலைவர்கள் பல சமுதாயத்திற்கு, ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர் . இரண்டு கதாபாத்திரங்களையும் நன்கு புரிந்து மக்களுடைய பல பிரச்சனையை வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து பல நல்ல முடிவுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரது நோக்கமும்.

 காலம் காலமாக

காலம் காலமாக

ராசாக்கண்ணு நரேன் இரண்டு கதாபாத்திரமும் நம் வாழும் சமுதாயத்தில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இதில் யார் யார் என்ன பயன் அடைகிறார்கள் யாருக்கு உதவிகள் கிடைக்கிறது ,காலம் காலமாக நிலவி வரும் சூழ்நிலை அனைத்தையும் புரிந்து பல புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அனைவரது எதிர்பார்ப்பும் அது தான் . பொறுத்திருந்து பார்ப்போம். இந்த இரண்டு படங்களையும் இயக்கிய இயக்குனர்கள் , இரண்டு இயக்குநர்களுடைய சிந்தனை இந்த சமூகத்திற்கு மிக அவசியம் ஆகும் .தா.சே.ஞானவேல் மற்றும் பிரபுஜெயராம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X