என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் !
சென்னை : ஒரே மாத்தில் 62 எம்.ஜி.ஆர் திரைப்படங்களை ஒளிபரப்பியதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் மக்கள் மனதில் எவர் கிரீன் ஹீரோவாக இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர். லாக்டவுன் நேரத்தில், அவரது ரசிகர்களுக்கு அவரின் திரைப்படங்கள் மூலம் ஒரு பாசிட்டி எனர்ஜி கிடைத்திருக்கிறது.

அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பின்னர் அதிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனிக்கட்சி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வரானார். தமிழக மக்களின் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவர் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பல கோணங்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், இன்றும் மக்களின் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரை நினைவூட்டும் வகையில் இன்றும் அவரின் திரைப்படங்கள் பேசப்படுகிற்ன.
சமூக அக்கறை, பெண்ணூரிமை, அரசியல், காதல், குடும்பம், தத்துவ பாடல்கள், பட்டயை கிளப்பும் சண்டைக்காட்சிகள், உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என இவர் திரைப்படங்களில் இல்லாத அம்சங்களே இல்லை. அனைத்து வயதினராலும் ஈர்க்கப்பட்ட முதல் நடிகர் என்றால் அது நம் பொன்மனச்செம்மல்தான்.

அவரை மீண்டும் திரும்பிபார்க்க வைக்கும் விதமாக மார்ச் 20ல் லிருந்து கடந்த ஏப்ரல் 20 வரை அவரின் 62 திரைப்படங்கள் ஜெயா-டிவி தொலைக்காட்சி, சன்-லைஃப், ராஜ் டி.வி, மெகா-டிவி, முரசு, வசந்த்-டிவி ஆகிய சேனல்கள் மூலமாக ஒளிபரப்பானது.
இந்த தகவலை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லாக் டவுன் முடிவதற்குள் 100 வித்தியாசமான படங்களை அனைத்து தொலைகாட்சிகளும் நிச்சயம் ஒளிபரப்பி விடும் என்று நம்புகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் பார்த்த படத்தையே திரும்பி திரும்பி பல முறை பார்ப்பது, தற்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பரவசப்படுவது, டிவி யில் பாடல் ஒலிக்கும் போது கூட சேர்ந்து பாடுவது, சபாஷ் என்று அலறுவது, உடம்பில் ஒரு புது உத்வேகம் வந்தது போல் துடிப்பது இவை எல்லாம் எம் ஜி ஆர் பக்தர்களால் மட்டுமே முடியும்.

சின்ன குழந்தைகள் போல் இவர்கள் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது, இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் மிக பெரிய ஆனந்தமே . காலங்கள் கடந்தும் தத்துவ பாடல்கள் மூலம் நம்பிக்கை ஊட்டும் எம் ஜி ஆர் படங்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் சல்யூட் தான்.


Click it and Unblock the Notifications











