BB7 Akshaya Udhayakumar: தளபதி விஜய் படம் பார்த்து தான் தமிழ் கத்துக்கிட்டேன்.. அசத்துறாரே அக்ஷயா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ள அக்ஷயா உதயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் புவனாவுக்கு தங்கையாக நடித்திருப்பார் அக்ஷயா உதயகுமார். ஏற்கனவே மலையாளத்தில் சித்தி என்னும் படத்தில் நடித்த இவர் தமிழில் லவ் டுடே படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக மாறியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலையாள நடிகை: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் மலையாள போட்டியாளர்களும் அவ்வப்போது கலந்து கொண்டு வரும் நிலையில் இந்த சீசனில் கேரளாவைச் சேர்ந்த அக்ஷயா உதயகுமார் போட்டியாளராக அறிமுகம் ஆக உள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சித்தி என்னும் படத்தில் நடித்த இவர், தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்துள்ளார்.
இவானா தங்கச்சி: லவ் டுடே படத்தில் சத்யராஜின் மகளாகவும் இவானாவின் தங்கையாகவும் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களை யாருடா இந்த பொண்ணு என்று ஏங்க வைத்த அக்ஷயா உதயகுமார் பிக்பாஸ் வீட்டிலும் இந்த சீசனில் ரசிகர்களை இமிடியட் ஆக லைக் செய்ய வைப்பார் என தெரிகிறது.

தளபதி தான் புடிக்கும்: கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் சரளமாக தமிழ் பேச காரணமே தளபதி விஜய் தான் என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அக்ஷயா உதயகுமார் கூறியிருந்தார். மலையாளத்தில் வெளியாகும் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் பீட்ஸ் அதிகமாக இல்லாமல் மெலடி ஆகவே இருக்கும்.
ஆனால் தளபதியின் பாடல்கள் தான் தாறுமாறாக நடனம் போட வைக்கும். சிறுவயது முதலே தளபதி விஜய்யின் படங்களையும் பாடல்களையும் பார்த்து வளர்ந்ததால் தான் தமிழ் பேசவே கற்றுக் கொண்டேன் எனக் கூறியிருந்தார். லாஸ்லியா, ஜனனி வரிசையில் இன்னொரு தளபதி ஃபேன் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் ரங்கநாதன் ரகளை: லவ் டுடே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் பிரதீப்போட டார்ச்சர் தாங்க முடியாது. அந்தளவுக்கு எல்லாரையும் ரகளை பண்ணி ஜாலியாகவே வைத்திருப்பார் என்றும் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











