Bigg Boss 8 Contestant 4: என்எஸ்கே ரம்யாவின் 2வது கணவர்.. மனைவி போல இவரும் விளையாடுவாரா?
சென்னை: கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன், நடிகர் ஆர்.கே. ராமசாமி மற்றும் நடிகை பி. ஏ. மதுரம் ஆகியோரின் பேத்தியான என்எஸ்கே ரம்யாவின் இரண்டாவது கணவரான சத்யா பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தனது மனைவி என்எஸ்கே ரம்யாவின் பிறந்தநாள் அன்றே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் உள்ளே நுழைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகர் சத்யா தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார்.

ஜிம் வொர்க்கவுட் செய்து வேறலெவலில் தனது பாடியை மெயின்டெயின் செய்து வைத்திருக்கும் சத்யா இந்த சீசனில் யாருடனாவது சண்டைக்கு சென்றால் செமையா இருக்கும் என்றும் பிசிக்கல் டாஸ்க்கில் பின்னி பெடலெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என ரசிகர்கள் சத்யாவை வரவேற்று வருகின்றனர்.
4 போட்டியாளர்கள்: பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே நுழைந்தார். ஃபேட்மேனை பார்த்து விஜய் சேதுபதியே பயந்து போய் தன்னை பற்றிய விமர்சனத்தை கொடுக்கச் சொன்னார். 2வது போட்டியாளராக விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்த சச்சனா உள்ளே நுழைந்தார். 3வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு கவர்ச்சி கன்னி தர்ஷா குப்தா உள்ளே நுழைந்த நிலையில், 4வது போட்டியாளராக சத்யா நுழைந்துள்ளார்.
என்எஸ்கே ரம்யாவின் 2வது கணவர்: என்எஸ்கே ரம்யாவுக்கு நடைபெற்ற முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், சீரியல் நடிகர் சத்யாவை 2வதாக திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலக்குயில் சீரியலில் நடித்தவர் தான் இந்த சத்யா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம் பாடி பார்த்து பாராட்டிய விஜய் சேதுபதி: சத்யாவின் ஜிம் பாடியை பார்த்து விஜய் சேதுபதியே ஷாக் ஆகி பாராட்டியுள்ளார். தினமும் வொர்க்கவுட் செய்து பிசிக்கல் டாஸ்க்கில் எல்லாம் சத்யா சக்கைப் போடு போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியல் நடிகர்கள் இந்த முறை ஏகப்பட்ட பேர் வீட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், பிக் பாஸில் ஏகப்பட்ட டிராமாக்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











