அத்தனை பேர் வாயிலும் "தீ"தான்.. செம ஹாட் வாய்ஸ் மச்சி.. பட்டையைக் கிளப்பும் எஞ்சாமி!
சென்னை : 'தீ' தற்போது அனைவரும் முணுமுணுக்கும் ஒரு பெயர். யாருப்பா இந்த தீ என்று கேட்கும் அளவுக்கு தற்போது பிரபலமாகி வருகிறார்.
தீயின் குரலில் ஏதோ ஒரு மாயாஜலம், ஓர் ஈர்ப்பு, ஒரு மயக்கம் அனைவரையும் கட்டிப்போடும் தந்திர வித்தை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது எஞ்சாய் எஞ்சாமி மூலம் அனைவரும் இணையத்தில் தேடும் ஒருவராக மாறியுள்ளார் 'தீ'.

பாடகி கனவு
சிட்னியில் இருந்து வந்த ஐய்யராத்து மாமி தான் இந்த தீ. இலங்கைத் தமிழ் குடும்பத்தில் பிந்த இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் மீனாட்சி சந்தோஷ் நாராயணனை மறுமணம் செய்து கொண்டார். சந்தோஷ் நாராயணின் ஆல்பம் பாடல்களில் அவ்வப்போது பாடி தனது கனவைத் தொடங்கினார்.

நான் நீ வாழவே
மெட்ராஸ் படத்தில் வரும் ' நான் நீ வாழவே " என்ற பாடல் தான் திரைத்துறையில் இவருக்கு முதல் அறிமுகத்தை கொடுத்தது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த பாடலுக்கு சிறந்த பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதுகள் என பல விருதுகளை பெற்றார். முதல் பாடலிலேயே விருது பெற்ற பாடகி என்று பெயரும் எடுத்தார்.

தோரணையான குரல்
சுதா கொங்குரா இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று திரைப்படத்தில், உசுரு நரம்புல நீ, ஏய் சண்டக்காரா பாடலை பாடியுள்ளார். தைரியமான பெண் தோரணையை குரலிலேயே காட்டிய விதம், விவேக்கின் வரிகள், சந்தோஷ் நாராயணனின் அழகான மெட்டுக்கள் பாடலுக்கு மற்றொரு பலம்.

குரலில் மனம் கரைந்தது
தீயின் மாயக்குரலில் உன் காதல் வாசம் என்று பாடல் தொடங்கும் போதே, அந்த குரலில் மனம் அப்படியே உரைந்து போய்விடுகிறது. சந்தோஷ் நாராயணனின் மற்றுமொரு அக்மார்க் மெலடியாக அமைந்தது இந்த பாடல். இப்பாடல் அனைவரின் ஃபேரைட் பாடலாக மாறியது என்றால் அது மிகையாகாது.

மேஜிக் மெஸ்மரிசம்
தீயின் மேஜிக் மெஸ்மரிசம் குரலுக்கு தீனிப்போட்டது ரவுடிபேபி பாடல். தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோரின் அட்டகாசமான நடன அசையில் இன்று வரை அனைவரும் விரும்பும் பாடலாக உள்ளது ரவுடி பேபி. தனுஷ் மற்றும் தீயின் குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ஹிட்டோ ஹிட்
அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தில் வானில் இருள், வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட ஜிப்ஸி படத்தின் மனமெங்கும் மாய ஊஞ்சல், சூரரைப்போற்றுப்படத்தில் காட்டுப்பயலே கொஞ்சிப்போடா, ரகிட ரகிட ரகிட என ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் தீ . இந்த அனைத்துப்பாடல்களும் ஹிட்டோ ஹிட்டுத்தான்.

சாதனை தொடர வாழ்த்துக்கள்
தீ மற்றும் அறிவு தனித்துவமான திறமை மிக்கவர்கள் என்பதை இந்த எஞ்சாய் என்சாமி என்ற ஆல்பம் பாடலின் மூலம் நிருபித்துள்ளார்கள். பல லைக்குகள் பலரது பாராட்டுகள் என இணையத்தையே திண்டாடவைத்துள்ளது இந்த பாடல், தீயின் மாயாஜால குரலையும் இசையின் மீது அவருக்கு இருக்கும் அலாதியான ஆர்வத்தையும் காணும் போது இசையின் பயணம் சரியானவர்களின் கைகளில் தான் இருக்கிறது என்று நம்மால் மகிழ்ச்சி அடைய முடிகிறது. இன்னும் பல படைப்புகள், பல சாதனைகளை தீ நிகழ்ந்த வேண்டும் . மேலும் இது போன்ற பல பாராட்டுகளை அவர் பெற ஒன் இந்தியா தமிழ் அவரை வாழ்த்துகிறது.


Click it and Unblock the Notifications











