அஜித் செய்ததை அனைத்து ஹீரோக்களும் செய்ய வேண்டும்: விஜய் அப்பா

By Siva

Recommended Video

Nerkonda paarvai review | நேர்கொண்ட பார்வை படத்தில் என்ன இருக்கு, இல்லை?

சென்னை: அஜித் செய்ததை அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் ஆகியோர் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தாரும் நட்பாக உள்ளனர். இரு குடும்பமும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்கிறது.

இந்நிலையில் அஜித், விஜய் ரசிகர்கள் மட்டும் எப்பொழுதும் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் மோதிக் கொள்வதற்காகவே அஜித், விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேகுகளை உருவாக்குகிறார்கள். அதை தேசிய அளவில் எல்லாம் கூட டிரெண்டாக்கவிட்டு மொழி தெரியாதவர்களை குழம்ப வைக்கின்றனர். என்ன தான் கேவலமாக திட்டி மோதிக் கொண்டாலும் முக்கியமான விஷயங்களில் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அது தற்காலிகமாகத் தான்.

எஸ்.ஏ. சந்திரசேகர்

எஸ்.ஏ. சந்திரசேகர்

அஜித்தும், விஜய்யும் நண்பர்களாக இருக்கும்போது அவர்களின் ரசிகர்கள் இப்படி எப்பொழுது பார்த்தாலும் மோதிக் கொள்வது பிடிக்கவில்லை என்று இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அந்த மோதல்களை பார்த்து தனக்கு வருத்தமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஷோபா

ஷோபா

அஜித் படங்கள் எப்பொழுது வெளியானாலும் முதல் நாளே பார்த்துவிடும் பழக்கம் வைத்துள்ளாராம் விஜய்யின் அம்மா ஷோபா. இந்த தகவலை எஸ்.ஏ. சந்திரசேகர் தான் தெரிவித்துள்ளார். ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்யும், அஜித்தும் சேர்ந்து நடித்த போதில் இருந்து ஷோபாவுக்கு தல மீது தனிப் பாசம்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

அஜித் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் சமூகத்திற்காக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அனைத்து ஹீரோக்களும் தங்களின் கெரியரில் நேர்கொண்ட பார்வை போன்று ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். நேர்கொண்ட பார்வை படத்தை எனக்கு முன்பு என் மனைவி பார்த்துவிட்டார் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

அப்பா, மகள் பாசத்தை அழகாக காட்டிய விஸ்வாசம் படத்தை பார்த்து அழுதவர்கள் பலர். அதில் விஜய்யின் அப்பாவும் ஒருவர். அந்த படத்தை பார்த்தபோது இறந்து போன தனது மகள் வித்யாவின் நினைவு வந்து அழுதுள்ளார். வித்யா இறந்து பல ஆண்டுகள் ஆகியும் விஜய்யும் தன் தங்கையை இன்னும் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X