தனுஷுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா?: அப்போ இஎன்பிடி படம்?

By Siva

சென்னை: தனுஷுக்கும், இயக்குனர் கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை என்றும், அதனால் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.

டீஸர் அனைவரையும் கவர்ந்தது என்றே கூற வேண்டும்.

தனுஷ்

தனுஷ்

எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸாவதாக தெரியவில்லை. தனுஷ் விஐபி2 மற்றும் பவர் பாண்டி ஆகிய படங்களில் பிசியாகிவிட்டார். அவரின் வட சென்னை படமும் பாதியில் நிற்கிறது.

கவுதம்

கவுதம்

கவுதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் கவுதம், தனுஷ் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

எனை நோக்கி பாயும் தோட்டா படம் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு மேல் மீண்டும் தொடரலாம் என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினம்

காதலர் தினம்

படத்தில் காதலுக்காக தோட்டாவை ஏற்க துணிகிறார் தனுஷ். படம் காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை பார்த்தால் அதற்கு வாய்ப்பே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X