»   »  காதலர்கள் அனுஷ்காவுக்கும், கோஹ்லிக்கும் இடையே பிரச்சனையாமே!

காதலர்கள் அனுஷ்காவுக்கும், கோஹ்லிக்கும் இடையே பிரச்சனையாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமண விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே பிரச்சனையாம்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து ரன்வீர் தீபிகா படுகோனேவையும், அனுஷ்கா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியையும் காதலித்து வருகிறார்கள்.

கோஹ்லியும், அனுஷ்காவும் தங்களின் காதலை வெளிப்படையாக கூறாமல் இருந்து வந்தனர்.

திருமணம்

திருமணம்

அனுஷ்கா, கோஹ்லி இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கோஹ்லி தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளாராம்.

கோஹ்லி

கோஹ்லி

கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறாராம் கோஹ்லி. அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளாராம். கோஹ்லியின் இந்த முடிவால் அனுஷ்கா எரிச்சலில் உள்ளாராம்.

அனுஷ்கா

அனுஷ்கா

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கோஹ்லியை திருமணம் செய்ய விரும்புகிறார் அனுஷ்கா. இந்நிலையில் கோஹ்லி திருமணத்தை தள்ளிப் போட்டதால் அவர் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

பிரச்சனை

பிரச்சனை

திருமண விவகாரம் தொடர்பாக கோஹ்லி, அனுஷ்கா இடையே பிரச்சனையாம். இதனால் வரும் 29ம் தேதி நடக்க உள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமணத்திற்கு கோஹ்லியுடன் ஜோடி போட்டு செல்ல அனுஷ்கா மறுத்துள்ளாராம்.

English summary
It seems to be tough time for India Test Skipper Virat Kohli, who's already facing the heat for his poor ODI performancein the year 2015. And now rumours are spreading that all isn't well between him and his actor girl friend Anushka Sharma.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil