பிரபாஸுக்கும், வாரிசு நடிகைக்கும் இடையே பிரச்சனையாமே?

By Siva

ஹைதராபாத்: சாஹோ படப்பிடிப்பில் பிரபாஸுக்கும், ஷ்ரத்தா கபூருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பிரபாஸுக்கும், ஷ்ரத்தாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியுள்ளது.

All is not well between Prabhas and Shraddha?

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பிரபாஸ், ஷ்ரத்தா நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதை உறுதி செய்வது போன்று இருந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபாஸ் காட்சிகளை இயக்குநர் ஒரே டேக்கில் ஓகே செய்தது ஷ்ரத்தாவுக்கு பிடிக்கவில்லையாம். என்னை மட்டும் ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் நடிக்க வைக்கிறார்கள், பிரபாஸுக்கு ஒரே டேக்கா என்று அவர் கோபப்பட்டாராம்.

பிரச்சனை என்று கூறப்பட்டாலும் நிஜத்தில் பிரபாஸும், ஷ்ரத்தாவும் நண்பர்களாக உள்ளார்களாம். ஷ்ரத்தா சொல்லித் தான் பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினாராம்.

பிரபாஸ், ஷ்ரத்தா பிரச்சனை ஒரு புறம் இருக்க சாஹோ படத்தின் இசையமைப்பாளர்களான ஷங்கர், இஹ்சான், லாய் ஆகியோர் திடீர் என்று படத்தில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் விலகியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X