»   »  பிரபல இயக்குனரின் பர்த்டே பார்ட்டிக்கு தனித்தனியாக வந்த சூப்பர்ஸ்டார், மனைவி: பிரச்சனையா?

பிரபல இயக்குனரின் பர்த்டே பார்ட்டிக்கு தனித்தனியாக வந்த சூப்பர்ஸ்டார், மனைவி: பிரச்சனையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஷாருக்கானும், அவரது மனைவியும் தனித்தனியாக வந்து போனது பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் 25ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். லண்டனில் இருந்த கரண் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட மும்பை திரும்பினார்.

நேற்று முன்தினம் மாலை கரணின் வீட்டில் பர்த்டே பார்ட்டி நடந்தது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானும் சரி, அவரின் மனைவி கவுரி கானும் சரி கரணுக்கு நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் ஷாருக்கான், கவுரி ஆகியோர் கரணின் பார்ட்டிக்கு தனித்தனியாக வந்துள்ளனர்.

கவுரி

கவுரி

பார்ட்டியில் ஷாருக்கானும், கவுரியும் பேசிக் கொள்ளவில்லை. மேலும் புகைப்படத்திற்கு சேர்ந்து நின்று போஸ் கொடுக்கவும் மறுத்துவிட்டனர். தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்கே ஷாருக், கவுரி ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது தான்.

சாரா

சாரா

கரணின் பர்த்டே பார்ட்டிக்கு நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா வந்திருந்தார். அவர், ஷாருக்கான், ஆர்யன் கான் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

கரணின் பர்த்டே பார்ட்டிக்கு வந்தவர்களில் ஐஸ்வர்யா ராய் தான் கடைசி ஆளாக கிளம்பிச் சென்றாராம். விடிய விடிய பார்ட்டியில் என்ஜாய் செய்துவிட்டு விடியப் போகும் நேரத்தில் கிளம்பிச் சென்றாராம் ஐஸ்.

கரீனா

கரீனா

நடிகர் ரன்வீர் சிங்கும் சரி, நடிகை கரீனா கபூரும் சரி கரண் ஜோஹாருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அப்படி இருந்தும் ரன்வீர், கரீனா கரணின் பர்த்டே பார்ட்டிக்கு வரவில்லை.

English summary
Who's who of Bollywood attended the birthday bash of Karan Johar and we know that you are eager to know what happened at his party when so many celebs were spotted under one roof! Among others, it was Shahrukh-Gauri Khan's strange behaviour that grabbed everyone's eyeballs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil