பிரபல டிவி நடிகைக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனையா?
மும்பை: தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரிக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஸ்வேதா திவாரி. அவருக்கும் நடிகர் அபினவ் கோஹ்லிக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்வேதா ரேயான்ஷ் என்ற மகனை பெற்றெடுத்தார். முதல் திருமணம் மூலம் ஸ்வேதாவுக்கு பாலக் என்ற பதின்வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் ஸ்வேதாவுக்கும், அபினவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது. ஸ்வேதா போன்று தன்னால் வெற்றிகரமான நடிகராக முடியவில்லை என அபினவுக்கு வருத்தமாம். ஆனால் அபினவ் இதை மறுத்துள்ளார்.
தொழில் விஷயத்தில் தன்னால் ஸ்வேதாவுடன் போட்டி போட முடியாது என்றும், தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அபினவ் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications