»   »  என்னை பார்த்தா இழிச்ச வாய் மாதிரி தெரியுதா?: தீபிகாவை பிரிந்த காதலர்

என்னை பார்த்தா இழிச்ச வாய் மாதிரி தெரியுதா?: தீபிகாவை பிரிந்த காதலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பொறுத்தது போதும் என்று நடிகர் ரன்வீர் சிங் காதலி தீபிகா படுகோனேவை பிரிந்துவிட்டாராம்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ரன்வீர் தீபிகாவை திருமணம் செய்ய விரும்பினார்.

தீபிகாவோ என் கெரியர் பீக்கில் இருக்கும்போது திருமணம் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

தீபிகா ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றபோது ரன்வீர் வெளிநாட்டுக்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். ஆனால் தீபிகாவுக்கோ ஹாலிவுட் தான் பெரிதாகத் தெரிந்தது.

வின் டீசல்

வின் டீசல்

ஹாலிவுட் நடிகர் வின் டீசலுக்கும் தீபிகாவுக்கும் இடையே தொடர்பு என்று பேச்சாக கிடந்தது. வின் டீசலுடன் கனவில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுவிட்டதாக பேட்டி ஒன்றின்போது தெரிவித்தார் தீபிகா. இதை எல்லாம் பார்த்து ரன்வீர் கடுப்பானாலும் பொறுமையாக இருந்தார்.

ரன்வீர்

ரன்வீர்

தீபிகா தன் இஷ்டத்திற்கு நடந்து கொண்டார். ரன்வீரை கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து ரன்வீர் சிங் தீபிகாவை பிரிந்து சென்றுவிட்டாராம்.

காதல்

காதல்

தீபிகாவை பிரிந்த பிறகு ரன்வீர் சிங் வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அவரும் தீபிகாவுடன் எவ்வளவு தான் அட்ஜஸ்ட் செய்வது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

English summary
According to reports, Bollywood actor Ranveer Singh and actress Deepika Padukone are no longer a couple. Ranveer has reportedly even started dating another girl.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X