எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா?: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. படத்தில் நடித்தபோது சாய் பல்லவிக்கும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்தபோது சாய் பல்லவி மற்றும் ரகுல் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரச்சனை குறித்து சாய் பல்லவி எதுவும் தெரிவிக்கவில்லை.

ரகுல் ப்ரீத் சிங்
சாய் பல்லவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். தன்னை விட சாய் பல்லவியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் உள்ளதாக நினைத்து ரகுல் கோபம் அடைந்தார் என்று தகவல் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி
எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டை எதுவும் இல்லை. நாங்கள் சண்டை போட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவருக்குமே முக்கியமான கதாபாத்திரம் தான். என் கதாபாத்திரத்தை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

என்.ஜி.கே.
ஒரு படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடித்தாலே பிரச்சனை தான் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சாய் பல்லவி எப்படி நடிப்பார், ரகுல் எப்படி நடிப்பார் என்று தெரிந்து அதற்கு ஏற்றது போன்று நிச்சயம் நல்ல கதாபாத்திரங்களாக கொடுத்திருப்பார் செல்வராகவன் என்று நம்பப்படுகிறது.

முன்னணி நடிகைகள்
தெலுங்கு திரையுலகில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவருமே முன்னணி நடிகைகளாக உள்ளனர். சாய் பல்லவி கோலிவுட்டில் படங்களை தேர்வு செய்ய ரொம்பவே யோசிக்கிறார். ரகுல் ப்ரீத்துக்கோ பெரிய பிரேக் கிடைக்காமல் உள்ளது.


Click it and Unblock the Notifications











