விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க
சென்னை: எல்.கே.ஜி. 5 மணி காட்சி தொடர்பாக விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்துவிட்டது.
ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இதை பார்த்த விஷ்ணு விஷால் அதிகாலை காட்சியின் மதிப்பு இழந்து வருகிறது என்று ட்வீட்டினார்.
அவர் ட்வீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி பதில் அளிக்க விஷ்ணு மறுபடியும் ட்வீட் போட மோதல் முற்றியது. இந்நிலையில் ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்துள்ளது.
சமரசம்
விஷ்ணு விஷாலிடம் பேசிவிட்டேன். காலையில் நடந்தது ஒரு வேகத்தில் நடந்துவிட்டது. கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டோம் என்று பாலாஜி ட்வீட் போட்டுள்ளார். அவர் ட்வீட்டிய வேகத்தில் விஷ்ணு விஷால் எல்.கே.ஜி., பாலாஜியை விமர்சித்து போட்ட ட்வீட்டுகளை எல்லாம் நீக்கிவிட்டார்.
வாழ்த்து
ஆர்.ஜே. பாலாஜி பேசியதை அடுத்து அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் அப்பாவை விமர்சித்து வெளியிட்ட வீடியோவை பாலாஜி நீக்கிவிட்டார். சிறிது நேரத்திற்கு முன்பு வரை மல்லுக்கட்டியவர்கள் தற்போது ராசியாகிவிட்டனர். நல்லது தான்.
மோதல்
சண்டை போட்டு மாறி மாறி போட்ட ட்வீட்டுகளை வேக, வேகமாக நீக்கிவிட்டனர். சண்டை போடுவது என்றால் வாட்ஸ்ஆப்பில் போட வேண்டியது தானே, ட்விட்டர் தான் கிடைத்ததா என்கிறார்கள் நெட்டிசன்கள்.
வேலை
சண்டை முடிந்துவிட்டது போய் வேலையை பாருங்க என்று ஒருவர் ஜிஃப் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தான் இந்த நேரத்திற்கு பொருத்தமானது.


Click it and Unblock the Notifications











