twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆல் லவ் நோ ஹேட் ..சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா !

    |

    சென்னை : ஆல் லவ் நோ ஹேட் என்ற இசை விழாவின் புரேமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித் ஸ்ரீராம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சென்னையில் ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் வருகின்ற 8 ஆம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் , பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடல்கள் பாட உள்ளார். இதில் அவருடன் பணியாற்றிய இசை கலைஞர்களை வைத்து இசை கச்சேரி நடத்த உள்ளார் சித் ஸ்ரீராம்.

    All love no hate concert by sid sriram

    சித் ஸ்ரீராம் தனது காந்த குரலால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள ரசிகர்களை கவர்ந்தவர். பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் சித். இவர் பாடிய தள்ளி போகாதே பாடல், மறுவார்த்தை பேசாதே, கண்ணாண கண்ணே போன்ற பாடல்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    All love no hate concert by sid sriram

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார் சித். நான் சென்னை பையன் தான் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டேன். எனக்கு மியூசிக் என்றால் ரொம்ப பிடிக்கும். தமிழ் பாடல் வரிகளில் எதாவது பிழை இருந்தால் என் அம்மாவை தான் கேட்டு தெரிந்து கொள்வேன். என் அம்மா திருபுகழை பாடுவார்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ஒரு நடிகனாக என் காரில் ஏறாதே பிக்பாஸ் பிரபலத்துக்கு பிரபல இயக்குநர் உத்தரவு!ஒரு நடிகனாக என் காரில் ஏறாதே பிக்பாஸ் பிரபலத்துக்கு பிரபல இயக்குநர் உத்தரவு!

    All love no hate concert by sid sriram

    ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் இளையராஜாவை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீராம், ரஹ்மான் சார் ஒரு மலையின் உச்சி போன்றவர். அவர் ஒரு பாடலை எப்படி பாட வேண்டும் என்று அவரே சொல்லி கொடுப்பார். இளையராஜா உடன் பணியாற்றியதில் மிகவும் சந்தேஷப்படுகிறேன் என்றார் சித் ஸ்ரீராம்.

    வரும் 8 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி அனைத்து வயதினரையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று பதிலளித்தார் சித் ஸ்ரீராம். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி, சென்னை, மதுரை, கொச்சின்,பெங்களூரு போன்ற நகரங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினார்.

    English summary
    All love no hate concert by sid sriram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X