twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த விஷயத்துல எல்லா நடிகர்களையும் அப்படி பார்க்காதீங்க.. வேண்டுகோள் வைத்த அக்‌ஷய் குமார்!

    By
    |

    சென்னை: மொத்த நடிகர்களையும் போதைப் பொருள் விவாகரத்தில் சம்மந்தப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கி உள்ளன.

    முதலில் நெபோடிசப் பிரச்னை கடுமையாக விவாதிக்கப்பட்டது. வாரிசு நடிகர், நடிகைகளால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோனதாகக் கூறப்பட்டது.

    என்னடா இது..கான்ஜூரிங் ரூம் செட் போட்றிக்கீங்க.. பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!என்னடா இது..கான்ஜூரிங் ரூம் செட் போட்றிக்கீங்க.. பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

    வாரிசு நடிகைகள்

    வாரிசு நடிகைகள்

    இந்த விவாதம் காரணமாக சில வாரிசு நடிகைகள் ட்விட்டரில் இருந்து வெளியேறினர். பின்னர் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பானது. இதில் சுஷாந்த் சிங் காதலி நடிகை ரியா, அவர் சகோதரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    இதையடுத்து நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். நான்கு பேரிடமும் பல மணி நேரம் விசாரணை நடந்தது. அனைவரும் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர். இது பாலிவுட்டிலும் மற்ற சினிமாதுறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அக்‌ஷய் குமார்

    அக்‌ஷய் குமார்

    இதையடுத்து பாலிவுட்டில் மாஃபியா செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. இதுபற்றி பல நடிகர், நடிகைகள் பேசி வந்த நிலையில், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் நடிகர் அக்‌ஷய் குமார் ஏதும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். அவர் இப்போது தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

    நட்சத்திரங்கள்

    நட்சத்திரங்கள்

    கடந்த சில வாரங்களாக பாலிவுட் பற்றி எதிர்மறையான கருத்துகள் பரவி வருகின்றன. நாங்கள் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் பாலிவுட் உங்கள் அன்பின் காரணமாக உருவாக்கப்பட்டது. நாங்கள் இதை தொழிலாக மட்டும் செய்யவில்லை, இதன் மூலம் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறோம்.

    பொய் சொல்வதாக

    பொய் சொல்வதாக

    சுஷாந்த் மரணத்துக்கு பிறகு ஏராளமான பிரச்னைகள் வெளி வந்திருக்கின்றன. அது கஷ்டத்தை தருகிறது. நிச்சயமாக அவை சரிசெய்யப்பட வேண்டும். போதைப் பொருள் விவாகரம் இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. பாலிவுட்டில் இந்தப் பிரச்னை இல்லை என்று சொன்னால், நான் பொய் சொல்வதாக இருக்கும்.

    சாத்தியமில்லாதது

    சாத்தியமில்லாதது

    மற்றத்துறைகளை போலவே இதிலும் இருக்கிறது. ஆனால், எல்லோரும் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. அது சாத்தியமில்லாதது. போதைப் பொருள் என்பது சட்டரீதியான விவகாரம். இதன் விசாரணை சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர்களுக்கு திரைத்துறையில் உள்ள ஒவ்வொருவரும் ஒத்துழைப்பார்கள்.

    சினிமாத் துறை

    சினிமாத் துறை

    அதோடு ஒரு வேண்டுகோள். ஒட்டுமொத்த சினிமாத் துறையையும் அதே கண்ணோட்டத் தோடு பார்க்க வேண்டாம். அது சரியானதல்ல. இவ்வாறு அக்‌ஷயகுமார் கூறியுள்ளார். கூடவே மீடியாவுக்கு கோரிக்கையும் வைத்துள்ள அக்‌ஷய்குமார், ஒரு எதிர்மறை செய்தி, ஒருவருடைய பல வருட உழைப்பையும், பெயரையும் கெடுத்துவிடும் என்பதால் பொறுப்போடு செய்திகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Akshay Kumar sent out a heartfelt appeal to fans as well as the media to not paint every film personality with the same brush.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X