தேர்தலுக்காக ரத்தான படப்பிடிப்புகள்..!

By Shankar

சென்னை: தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இன்று பல படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன.

உத்தம கமல்

உத்தம கமல்

கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்' படப்பிடிப்பு பெங்களூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கமல் பெங்களூரில் தங்கியிருந்தார். ஆனால் ஓட்டுப் போடுவதற்காக படப்பிடிப்பை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்த கமல், சென்னை வந்து கவுதமியுடன் வாக்களித்தார். மீண்டும் இன்று மாலையே பெங்களூர் சென்று படப்பிடிப்பைத் தொடர்கிறார்.

அஞ்சான் சூர்யா

அஞ்சான் சூர்யா

அதே போல் ‘அஞ்சான்' படப்பிடிப்புக்காக சூர்யா மும்பையிலிருந்த சூர்யா, ஓட்டுப் போடுவதற்காக இன்று காலை சென்னை வந்தார். அவரும் இன்று மாலையே மும்பை புறப்பட்டுச்செல்கிறார்.

கத்தி விஜய்

கத்தி விஜய்

விஜய் ‘கத்தி' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. ஆனால் வாக்களிப்பதற்காக அவரும் இன்று ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்.

அஜீத்

அஜீத்

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் சமீபத்தில்தான் தொடங்கியது. ஆனால் வாக்களிப்பதற்கு வசதியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் அஜீத்.

கார்த்தி

கார்த்தி

விளம்பர படமொன்றில் நடிக்க மும்பை சென்ற கார்த்தி, இன்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை வந்து ஓட்டுப் போட்டார்.

ஸ்டுடியோக்கள்

ஸ்டுடியோக்கள்

இதேபோல திரைப்பட நிறுவனங்களில், ஸ்டுடியோக்களில் நடந்து வந்த அத்தனைப் பணிகளும் இன்று நிறுத்தப்பட்டு, அனைத்து கலைஞர்களும் ஊழியர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வகை செய்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X