twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் கொரோனா.. 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்.. ஃபெப்சி அதிரடி அறிவிப்பு!

    |

    சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அறிவித்துள்ளார்.

    Recommended Video

    THALA AJITH NEXT MOVIE DIRECTOR REVEALED | TALKING 2 MUCH | EPISODE-1 | FILMIBEAT TAMIL

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விடுமுறை

    விடுமுறை

    இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ்க்கு இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் மழலையர் வகுப்புகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபெப்சி கூட்டம்

    ஃபெப்சி கூட்டம்

    பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், முடிந்தவரை கைகளை அடிக்கடி கழுவி வைரஸ் பரவுவதில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க திரைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    அதன்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை வட பழனியில் உள்ள அதன் அலுவலகத்தில் தலைவர் ஆர்கே செல்வமணி தலைமையில் நடைபெற்றது.

    வியாழக்கிழமை முதல்..

    வியாழக்கிழமை முதல்..

    கூட்டத்திற்கு பிறகு ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். உடனடியாக படப்பிடிப்புகளை நிறுத்த முடியாது என்பதால் வரும் வியாழக்கிழமை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்படும் என ஆர்கே செல்வமணி அறிவித்துள்ளார்.

     அனைத்தும் நிறுத்தம்

    அனைத்தும் நிறுத்தம்

    மறு அறிவிப்பு வரும் வரை திரைப்படங்கள், விளம்பரப்படங்கள், டிவி சீரியல்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் ஃபெப்சி தலைவர் அறிவித்துள்ளார். தற்போது வரை ஒரு நாளைக்கு 36 படங்களின் படப்பிடிப்பும், 60 டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பும் நடத்தப்படுவதாக கூறிய ஆர்கே செல்வமணி இவை அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்றார்.

    ஃபெப்சி எச்சரிக்கை

    ஃபெப்சி எச்சரிக்கை

    ரகசியமாக படப்பிடிப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர் கே செல்வமணி எச்சரித்தார். படப்பிடிப்பு தொடர்பான எந்த பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்றம் அவர் கேட்டு கொண்டார். நாட்டு மக்கள் உயிர் பிரச்சனை என்பதால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கர்நாடகா, கேரளா மாநிலங்களை ஒட்டிய 15 மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Fefsi has announced that all shootings will be postponed from 19th of this month. Severe action will be taken if shooting conducts Secret.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X