Jailer Ticket Booking: ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்.. என்ன எல்லாமே ரெட்டா காட்டுது.. ஜெயிலர் வேட்டை ஸ்டார்ட்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் முதல் நாள் காட்சிகள் முழுவதும் அதிகளவில் புக்காகி ரெட் கலரில் காட்டுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தர்பார், அண்ணாத்த படங்கள் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்கிற கான்ஃபிடன்ஸ் உடன் ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்: ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் படம் தான் ஓடும் போல, அந்த அளவுக்கு பல திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், புக் மை ஷோவில் 90 சதவீத திரையரங்குகளில் முதல் நாளுக்கான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறியுள்ளன. இதை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அலப்பறையை ஆரம்பித்துள்ளனர்.
72 வயதிலும் இப்படியா: நடிகர் ரஜினிகாந்த் ரிட்டயராகப் போகிறார், முன்னாள் சூப்பர்ஸ்டார் என்றெல்லாம் அவரது ஹேட்டர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும், கழுகு எப்போதுமே மேல பறந்துக் கொண்டு தான் இருப்பேன் என டிக்கெட் புக்கிங்கிலேயே நிரூபித்து விட்டார் ரஜினிகாந்த்.
முதல் நாள் மட்டுமின்றி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை பல முன்னணி திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் போர்டுகளை மாட்டியுள்ளன.

முதல் நாள் ரெக்கார்டு கன்ஃபார்ம்: இந்த ஆண்டு முதல் நாள் வசூலில் துணிவு படம் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த ரெக்கார்டை ஜெயிலர் திரைப்படம் எளிதில் பிரேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட படங்கள் கடந்த ஆண்டு செய்த பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் ரஜினிகாந்தின் ஜெயிலர் முறியடிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். வெளிநாடுகளிலும் ஜெயிலர் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











