எனக்கு மக்கள் ‘பேசிய விருது’ தேசிய விருதுக்கு ஒப்பானது... பார்த்திபன் சமாதானம்!

சென்னை: பெரும்பாலான திறமையாளர்களுக்கு விருது கிடைப்பது இல்லை என்ற தனது ஆதங்கத்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். ஆனால், மக்கள் தன்னைப் பாராட்டி பேசிய வார்த்தைகளே, தனக்கு தேசிய விருதுக்கு சமம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சடந்த சில நாட்களுக்கு முன்னர் 62வது தேசிய விருதுகள் பட்டியல் டெல்லியில் அறிவிக்கப் பட்டது. இப்பட்டியலில் தமிழில் சிறந்த படமாக 'குற்றம் கடிதல்', சிறந்த உறுதுணை நடிகராக 'பாபி சிம்ஹா', சிறந்த குழந்தைகள் படமாக 'காக்கா முட்டை' என தமிழ்ப் படங்களுக்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.

தேசிய விருது தேர்வுக்கு இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அப்படத்துக்கு எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக பார்த்திபன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பின்னி... மின்னி...

"'The wolf of wall street' படத்தில் லியானார்டோ டி காப்ரியோ-வுக்கு ஆஸ்கார் கிடைக்குமென நாடே காத்திருக்க, டி காப்ரியோ 10 வருடங்களாக அதற்காக வித்தியாசமான வேடங்களில் பின்னி/மின்னி ஆவலோடு காத்திருக்கிறார்.

விருது...

விருது...

திறமையுள்ள அனைவருக்கும் விருது கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது விருது.

பேசிய விருது...

பேசிய விருது...

எனக்கும் 'மேல்விலாசம்' என்ற மலையாளப்படம்,'ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் சிறந்த நடிப்புக்கும், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' சிறந்த இயக்குநர், திரைக்கதை இப்படி சில விருதுகள் கிடைத்திருக்கலாமென பாராட்டி மக்கள் 'பேசிய விருது' தேசிய விருதுக்கு ஒப்பானது.

தொடர்கிறேன்...

தொடர்கிறேன்...

இருப்பினும் தொடரும் உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் என் வித்தியாச முயற்சிகளை. நன்றி" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X