இந்த சீசனின் கடைசி நாமினேஷன்.. ஆசைக்காட்டி மோசம் செய்த பிக்பாஸ்.. நொந்துபோன ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் நேற்றைய எபிசோடில் நடைபெற்றது.
Recommended Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் திங்கள் கிழிமையான நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

ஓபன் நாமினேஷன்
அடுத்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் நேற்று பிக்பாஸின கடைசி நாமினேஷன் நடைபெற்றது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக ஓபன் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதற்காக ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில் உள்ள பிளாஸ்மா முன்பு வந்து நின்று சக ஹவுஸ்மேட்ஸ் இருவரை நாமினேட் செய்தனர்.

பாலாஜி நாமினேஷன்
முதலில் வந்த ரம்யா, ஷிவானி மற்றும் கேபியை நாமினேட் செய்தார். இருவரின் தனித்துவம் 90 நாட்களை கடந்தும் வெளிப்படவில்லை என்று நாமினேட் செய்தார். அடுத்து வந்த பாலாஜி, முதலில் ஆரியை நாமினேட் செய்தார். மற்றவர்களின் குறைகளை மட்டுமே சொல்லி ஆரி விளையாடுகிறார் என்று கூறினார். இரண்டாவது நாளாக ரம்யாவை நாமினேட் செய்த பாலாஜி, அவர் ஃபுல் பொட்டென்ஷியலையும் வெளிப்படுத்தவில்லை என்றார்.

கேம் ஸ்ட்ரேட்டஜி
அடுத்து வந்த ஷிவானி முதலில் ரியோவை நாமினேட் செய்தார். அவர் பாதுகாப்பாய் பேசி விளையாடுகிறார் என்றார். அடுத்ததாக சோமை நாமினேட் செய்த ஷிவானி, அவர் டீசன்ட் கேம் விளையாடுகிறார். நல்ல விஷயம்தான் ஆனால் அவருடைய ஸ்ட்ரேட்டஜி அது என தெரிவதால் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார்.

பாலாஜி பிளேம் கேம்
தொடர்ந்து வந்த கேபி முதலில் ரம்யாவை நாமினேட் செய்தார். அவர் சம்பந்தமே இல்லாத இடத்திலும் கூட ஒப்பினியன் சொல்கிறார். அதுவும் ஆரிக்கு எதிராய்தான் என்று கூறுகிறார். அடுத்து பாலாஜியை நாமினேட் செய்த கேபி, பாலா பிளேம் கேம் விளையாடுகிறார், எனக்கே நடந்துள்ளது என்றார்.

திருத்திக்கிட்டு ஃபைனல்ஸ் வாங்க
அடுத்து வந்த ஆரி, ரியோ என்னை வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கு நாமினேட் செய்தார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. நான் என் மகள் வந்தபோது கூட ரூல்ஸை பிரேக் பண்ணவில்லை என் உழைப்பை மட்டுப்படுத்தியதற்காக அவரை நாமினேட் செய்கிறேன் என்றார். அடுத்து பாலாஜியை நாமினேட் செய்த ஆரி, குறைகளை சொன்னால்தான் உன் நிறைகளை நீ தெரிந்து கொள்ள முடியும். ரெண்டு பேரும் திருத்திக்கிட்டு ஃபைனல்ஸ் வாங்க என்று கூறி சென்றார்.

சோம் குற்றச்சாட்டு
அடுத்து வந்த சோம் ஆரியையும் பாலாஜியையும் நாமினேட் செய்தார். இருவரும் அதிகம் கோபப்படுவதாக கூறிய சோம், ஆரி கோபத்தில் விட்ட சில வார்த்தைகளால்தான் பாலாஜி பிஸிக்கல் வயலென்ஸில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கேவலமானவன் இல்லை
பின்னர் வந்த ரியோ, ஆரி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறினார். அதாவது, பொண்ணு வரும் போது கூட அந்த மனுஷன் அப்படி ரூல்ஸ ஃபாலோ பண்ணியிருக்காரு. இவன் அதை பார்க்காம இதை போய் சொல்லியிருக்கானேன்னு நான் ஒரு இடத்துல தப்பா தெரியருதுக்கு வாய்ப்பு இருக்கு. நான் அந்தளவுக்கு கேவலமானவன் இல்ல என்றார். பின்னர் ஆரியையும் பாலாஜியையும் நாமினேட் செய்த அவர், பாலா கோபத்தின் வெளிப்பாடு தவறாக இருந்தது என்றும் ஆரியின் சில வார்த்தைகள் மற்றவர்களை தூண்டி விடுகிறது என்றும் கூறினார்.

எல்லோரும் நாமினேட்டட்
கடைசி வாரம் என்பதால் கேப்டனான ரியோவுக்கு எந்த விலக்கும் அளிக்கவில்லை. நாமினேஷன் புராசஸ் முடிந்த கையோடு ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய பிக்பாஸ், கடைசி நாமினேஷன் என்பதால் எல்லோரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெறுகிறீர்கள் என்று கூறினார். மேலும்
எல்லோரின் பெயரையும் முழுமையாக சொன்னார் பிக்பாஸ்.


Click it and Unblock the Notifications











