இளம் ஹீரோக்களிடம் ஓவரா புழங்குது போதை மருந்து... பாட்ஷா வில்லனின் பகீர் குண்டு!

By

திருவனந்தபுரம்: போதை மருந்து புழக்கம் மலையாள இளம் ஹீரோக்களிடம் இருப்பது உண்மைதான் என்று வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் தேவன் சொன்னார்.

பிரபல மலையாள நடிகர் தேவன். இவர் தமிழில், கேப்டன், ஹானஸ்ட் ராஜ், பாட்ஷா, காஞ்சனா, சென்னையில் ஒரு நாள், இமைக்கா நொடிகள் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

allegations related to drugs are true, says actor Devan

சமீபத்தில் மலையாள இளம் ஹீரோ ஷேன் நிகமுக்கும் தயாரிப்பாளருக்கும் ஹேர் ஸ்டைலை மாற்றியதால் பிரச்னை ஏற்பட்டது. வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார் ஷேன். வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம். படப்பிடிப்பு முடியும் வரை அதை வெட்டக் கூடாது. ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென்று தனது ஹேர்ஸ்டைலை வெட்டி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதனால் படத்தின் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். இந்தப் பஞ்சாயத்து மலையாள சினிமாவில் பரபரப்பாகி வருகிறது.

இளம் மலையாள ஹீரோக்கள் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் அதனால்தான் இது போன்ற பிரச்னைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி கருத்துத் தெரிவித்த நடிகர் தேவன், மலையாள இளம் ஹீரோக்கள், போதைக்கு அடிமையாகி இருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார்.

அவர் கூறும்போது, சினிமாவில் யாரும் எளிதாக எந்த இடத்தையும் அடையவில்லை. நான், மம்மூட்டி, மோகன் லால் உட்பட பலரும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துதான் வளர்ந்திருக்கிறோம். அதை கடந்துதான் வர வேண்டும். இளம் ஹீரோ ஷேன் நிகம், நடிகராக நடந்துகொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை. சினிமா என்பது ஒருவர் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. அது கூட்டு முயற்சி. இளம் ஹீரோக்கள் போதை மருந்து பயன்படுத்துவது உண்மைதான். அது அதிகம் கவலை அளிக்கும் விஷயம் என்றார்.

More from Filmibeat

Read more about: devan drug போதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X