லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த கமல், ஸ்ரீதேவி, ஸ்ருதி

By Siva

சென்னை: திருமணம் ஆகாமலேயே லிவ் இன் முறைப்படி குடும்பம் நடத்தப்பட்டதாக பேசப்பட்ட திரை நட்சத்திரங்களை பார்ப்போம்.

திருமணம் ஆகாமலேயே லிவ் இன் முறைப்படி திரை நட்சத்திரங்கள் வாழ்கிறார்கள் என்று செய்திகள் வருவதுண்டு. இந்த லிவ் இன் ஜோடிகளில் சிலர் திருமணம் செய்து கொள்வதும், பலர் குட்பை சொல்லிவிட்டு செல்வதும் உண்டு.

அவ்வாறு லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நட்சத்திர தம்பதிகளைப் பார்ப்போம்...

தர்மேந்திரா, ஹேமமாலினி

தர்மேந்திரா, ஹேமமாலினி

தமிழகத்தில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலானவர் ஹேமமாலினி. அவரும் இந்தி நடிகர் தர்மேந்திராவும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகக் கூறப்பட்டது. ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவை மணந்த ஹேமமாலினி இஷா, அஹானா என்ற 2 பெண் குழந்தைகளை பெற்றார்.

ஸ்ரீதேவி, மிதுன்

ஸ்ரீதேவி, மிதுன்

ஹேமமாலினி போன்று பாலிவுட்டில் செட்டிலானவர் ஸ்ரீதேவி. அவர் இந்தி திரையுலகில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் இந்தி நடிகர் மிதுனுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாகவும், ஏன் திருமணமே செய்து கொண்டதாகவும் அப்போது பேச்சாகக் கிடந்தது.

ஸ்ரீதேவி, போனி கபூர்

ஸ்ரீதேவி, போனி கபூர்

ஏற்கனவே திருமணமான இந்தி இயக்குனர் போனி கபூரை காதலித்த ஸ்ரீதேவி அவருடன் திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தியதாக கிசுகிசுக்கப்பட்டது. ஸ்ரீதேவி போனி கபூரை மணந்து ஜான்வி, குஷி என்ற 2 குழந்தைகளை பெற்றார்.

ராஜேஷ் கன்னா, டீனா முனிம்

ராஜேஷ் கன்னா, டீனா முனிம்

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவும், நடிகை டீனா முனிமும் காதலித்த காலத்தில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனராம். டீனா ராஜேஷை பிரிந்து ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியை திருமணம் செய்து கொண்டார்.

கமல், சரிகா

கமல், சரிகா

கமல் ஹாசன் இந்தி நடிகை சரிகாவுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு அவர் சரிகாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஸ்ருதி, அக்ஷரா ஆகிய மகள்கள் உள்ளனர். கமலும், சரிகாவும் விவகாரத்து பெற்றுவிட்டனர்.

ஆமீர் கான், கிரண் ராவ்

ஆமீர் கான், கிரண் ராவ்

ஆமீர் கான் இயக்குனர் கிரண் ராவை மணக்கும் முன்பு லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார் என்று செய்திகள் வந்தன. கிரண் ராவ் ஆமீரை மணந்து ஆசாத் என்ற மகனுக்கு தாயானார்.

சைப், அம்ரிதா, கரீனா

சைப், அம்ரிதா, கரீனா

சைப் அலி கான் தன்னை விட மூத்த நடிகையான அம்ரிதா சிங்கை மணந்து 2 குழந்தைகள் பெற்ற பிறகு பிரிந்தார். அவர் திருமணத்திற்கு முன்பே அம்ரிதாவுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்பட்டது. மேலும் சைப் தனது 2வது மனைவியான கரீனா கபூரை மணக்கும் முன்பு அவருடன் பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியாக பேசப்பட்டது.

ஜான் ஆபிரகாம், பிபாஷா

ஜான் ஆபிரகாம், பிபாஷா

ஜான் ஆபிரகாமும் பிபாஷாவும் 9 ஆண்டுகள் காதலித்து பிரிந்தனர். அவர்களும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாக பேசப்பட்டது.

சுஷ்மிதா சென், விக்ரம் பட்

சுஷ்மிதா சென், விக்ரம் பட்

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இந்தி பட இயக்குனர் விக்ரம் பட்டுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரா தத்தா, கெல்லி டார்ஜி

லாரா தத்தா, கெல்லி டார்ஜி

நடிகை லாரா தத்தா, பூட்டானைச் சேர்ந்த நடிகர் கெல்லி டார்ஜியை 8 ஆண்டுகள் காதலித்தார். காதலித்த காலத்தில் அவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்களாம். தற்போது லாரா டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவி.

சல்மான் கான், கத்ரீனா கைப்

சல்மான் கான், கத்ரீனா கைப்

சல்மான் கானும், கத்ரீனா கைபும் காதலித்ததும், பிரிந்ததும் அனைவரும் அறிந்ததே. அவர்கள் காதலித்த காலத்தில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினார்களாம்.

ஸ்ருதி ஹாசன், சித்தார்த்

ஸ்ருதி ஹாசன், சித்தார்த்

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி சிறிது காலம் தனது காதலர் சித்தார்த்துடன் மும்பையில் குடித்தனம் நடத்தினார். ஆனால் அந்த ஜோடி பிரிந்துவிட்டது. தற்போது சித்தார்த் நடிகை சமந்தாவை திருமணம் செய்யப் போகிறார்.

More from Filmibeat

Read more about: actors relationship
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X