Pushpa 2: வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2.. விரைவில் 1000 கோடி கிளப்பில் இணையும்!
சென்னை: சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 2: தி ரூல் படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருகிறிது. பான் இந்தியா படம் வெளியான இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இப்படத்தின் நான்காம் நாள் வசூல் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
புஷ்பா 2 கதை: புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் லாரி ஓட்டுநராக கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பராஜ், சட்டவிரோதமாக செம்மரம் கடத்தல் வியாபாரத்தில் தன்னை வல்லமைமிக்க நபராக மாறினார். என்னத்தான் சட்டவிரோதமான செயல்களை செய்தாலும், அம்மா மீதும் தனது காதலி ஸ்ரீவள்ளி மீதும் காதலையும் அன்பையும் வைத்து இருந்தார். மேலும் தனது குடும்பத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்று கதை விறுவிறுப்பாக சென்றது. இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி வகையில் புஷ்பா இரண்டாம் பாகம் வெளியாகி சர்க்கைப்போடு போட்டு வருகிறது.

வசூல் வேட்டை: புஷ்பா இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் தாரக் பொன்னப்பா என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்தில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் சொன்ன போதும், படம் முதல் நாளில், 294 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விரைவில் 1000 கோடி : புஷ்பா 2 திரைப்படம் உள்நாட்டில் சுமார் 585 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், வெளிநாட்டில், 19.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 185 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளாவியசுமார் ரூ.750 கோடியை வசூலித்துள்ளதால், இப்படம் பத்து நாட்களுக்குள் ரூ.1000 கோடி கிளப்பில் இணையும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











